லாபத்தை அள்ளித்தரும் சுயதொழில்..! தினமும் வருமானம் 3,500..!

Murukku Making Business

முறுக்கு தயாரிப்பு தொழில்..! Murukku Making Business..!

புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக உணவு சம்மந்தமான எந்த தொழில் துவங்கினாலும் அதில் நிச்சயம் நாம் வெற்றியடைய முடியும். அந்த வகையில் இந்த பதிவில் முறுக்கு விற்பனை தொழில் மூலம் நல்ல வருமானம்பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த தொழில் மூலம் அப்படி என்ன லாபம் பார்த்துவிட முடியும் என்று அனைவரும் யோசிக்கலாம். முறுக்கு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதன் காரணமாக தான் சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய டிப்பார்மென்ட் ஸ்டோர் வரை அனைத்து கடைகளிலும் முறுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சாலை ஓரங்களில் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் பஸ் ஸ்டாப் போன்ற பல இடங்களிலும் இதனை விற்பனை செய்கின்றன. முன்பெல்லாம் இந்த முறுக்குகளை கைகளில் பிழிந்துதான் முறுக்குகளை தயார் செய்வோம். ஆனால் இப்பொழுது இந்த முறுக்குகளை தயார் செய்வதற்கென்று தனியாக ஆட்டோமேட்டிக் முறுக்கு மிஷின் வந்துவிட்டு எனவே இந்த தொழிலை இயந்திரம் மூலம் துவங்கி எப்படி லாபம் அடையலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

பெண்களுக்கு ஏற்ற தொழில் இட்லி மாவு வியாபாரம்..!

லாபத்தை அள்ளித்தரும் சுயதொழில்..! Murukku Making Business..!

இயந்திரம்:-

automatic murukku making machine

இது ஒரு ஆட்டோமேட்டிக் முறுக்கு மிசின் இவற்றில் நாம் முறுக்கு மாவினை சேர்த்து இயந்திரத்தை செட்டிங் செய்து இயக்கினால் முறுக்குகளாக சுத்தி தரும். அதனை நாம் எண்ணெயில் பொரித்து எடுத்தால் போதும் முறுக்கு தயார். மேலும் இந்த இயந்திரத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த இயந்திரத்தில் நாம் 20 வகையான முறுக்குகளை தயார் செய்ய முடியும். அதாவது கை முறுக்கு, அரிசி முறுக்கு, மணப்பாறை முறுக்கு என்று 20 வகையான முறுக்குகளை உற்பத்தி செய்யலாம்.

MURUKKU

இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவங்களுக்கு நேரடியாக சென்று இயந்திரங்களை வாங்குவதே மிகவும் நல்லது. ஏனென்றால் இயந்திரந்தை எப்படி இயக்க வேண்டும் என்ற பயிற்சிகளை நாம் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

மூலப்பொருட்கள்:-

இந்த தொழிலுக்கு மிகவும் முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் அரிசி, உளுந்து, பொட்டுக்கடலை, எள் மற்றும் ஆயில் இவை அனைத்தும் மிக முக்கியமான மூலப்பொருட்கள் ஆகும். இதனை தாங்கள் மொத்தமாக வாங்கி முறுக்கு தயாரிப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

விற்பனை முறை:-

தாங்கள் தயார் செய்த முறுக்குகளை ஆர்டரின் பேரில் தயார் செய்து கொடுக்கலாம் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை நிலையங்களுக்கு கொடுத்து பயனடையலாம். அதேபோல் பஸ் ஸ்டாப், ரயில் நிலையங்களில் ஆட்களை வைத்து விற்பனை செய்யலாம், பாக்கெட்டுகளில் அடைத்து முறுக்குகளை விற்பனை செய்யும்பொழுது பேக்கிங் ஏற்றது போல் 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய் என்று விற்பனை செய்யலாம்.

இருப்பினும் இந்த தொழில் பொறுத்தவரை சுவை என்பது மிகவும் அவசியமான விஷயம் என்பதால், நல்ல கைப்பக்குவம் தெரிந்த ஆட்களை வைத்து முறுக்கு தயார் செய்வதன் மூலம் நல்ல லாபம் அடையாளம்.

முதலீடு:-

இந்த முறுக்கு பிசினஸ் துவங்க குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதலீடாக தேவைப்படும்.

வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

வருமானம்:

உதாரணத்திற்கு:- ஒரு நாளைக்கு 5 ரூபாய் பாக்கெட்டுகளில் 500 பாக்கெட்டுகளும், 10 ரூபாய் பாக்கெட்டுகளில் 100 பாக்கெட்டுகளும், 20 ரூபாய் பாக்கெட்டுகளில் 25 பாக்கெட்டுகளும் விற்பனை செய்யும்பொழுது. 4000 ரூபாய் வருமானம் கிடைக்கும் இவற்றில் செலவுகள் போக நிச்சயமாக 3500 வரை லாபம் பெறமுடியும்.

எந்த தொழில் துவங்கினாலும் அவற்றில் முழு மனதோடு, நம்பிக்கையுடன் இருந்தால் அவற்றில் தாங்கள் நிச்சயமாக வெற்றியடைய முடியும்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil