1000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Nannari Syrup Business

இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக சிறந்த வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Nannari Syrup Making Business in Tamil:

Nannari Syrup

சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். இந்த தொழில் தொடங்கினால் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன தொழிலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை வீட்டிலேயே நன்னாரி சிரப் தயார் செய்து அதை விற்பனை செய்து எப்படி லாபம் பார்ப்பது என்பதை பற்றி தான் பார்க்க போகின்றோம். சரி வாங்க நண்பர்களே அதற்கான மூல பொருட்கள் மற்றும் முதலீடு பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலீடு:

இந்த தொழில் தொடங்குவதற்கு முதலீடு அதிகமாக தேவைப்படாது. 1000 ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே கைநிறைய சம்பாதிக்கலாம்.

இந்த பொருளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை..! ஆனால் இதை வைத்து நல்ல வருமானத்தை பெறலாம்..!

மூலப்பொருட்கள்:

  1. சர்க்கரை – 600 கிராம்
  2. தண்ணீர் – 300 மில்லி
  3. சிட்ரிக் அமிலம் – 5 கிராம்
  4. நன்னாரி எஸ்ஸன்ஸ் – 15 மிலி
  5. புட் கலர் – தேவையான அளவு

நன்னாரி சிரப் செய்யும் முறை: 

Nannari Syrup Business

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்பு அதில் 600 கிராம் அளவிற்கு சர்க்கரையை போட்டு கொள்ள வேண்டும்.

பின் சர்க்கரை கரைந்து கொதிக்கும் நேரத்தில் அதில் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். பின் அது கொதிக்கும் நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

முதலீடே தேவையில்லை, வேண்டாம் என்று தூக்கி எரியும் இந்த பொருளை வைத்து கைநிறைய சம்பாதிக்கலாம்..!

 

பின் அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி ஆறவைத்து கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு நன்றாக ஆறியதும் அதில் புட் கலர் மற்றும் நன்னாரி எஸ்ஸன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இப்போது நன்னாரி சிரப் தயாராகிவிட்டது. இதை பாட்டிலில் ஊற்றி பேக் செய்ய வேண்டும். உங்களுடைய முகவரிகளை அதில் கொடுக்க வேண்டும்.

விற்பனை செய்யும் முறை: 

இந்த நன்னாரி சிரப் நீங்கள் ஜூஸ் கடைகள், பெரிய மால், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இந்த நன்னாரி சிரப் 1 பாட்டில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை தொடங்கி தினமும் நல்ல வருமானத்தை பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement