போட்டி இல்லாத தொழில்
வணக்கம் நண்பரகளே இன்று நம் வியாபார பதிவில் மிகவும் பயனுள்ள ஒரு அருமையான தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் குறிப்பாக இவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழிலாக இருக்கும். தீபாவளி நேரங்களில் இந்த தொழிலை செய்தால் வருமானம் அதிக அளவில் கிடைக்கும். மேலும் அவை என்ன தொழில் என்றும் அவற்றை செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருள்கள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை யார்வேண்டுமானாலும் செய்யலாம். |
முறுக்கு தயாரிப்பு தொழில்:
இன்று நாம் தெரிந்துகொள்ளப்போகின்ற தொழில் என்னவென்றால் முறுக்கு தயாரிப்பதுதான். இந்த முறுக்கு தயாரிக்கும் தொழில் சிறுதொழிலாக இருந்தாலும் கூட இதன் மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும். முறுக்கு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிட கூடிய ஒருவகையான உணவு பண்டமாகும்.
இந்த முறுக்கு பண்டங்களை தீபாவளி நேரத்தில் ஆர்டர் எடுத்து மொத்தமாக செய்வதினாலும் அல்லது முறுக்குகளை செய்து கடைகளில் விற்பதினாலும் அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் இவற்றை தயாரிப்பதற்கு என்னென்ன தேவைப்படுகிறது என்று பார்க்கலாம்.
முறுக்கு செய்யும் இயந்திரம்:
நீங்கள் முறுக்குகளை சுலபமாக தயாரிப்பதற்கு ஆன்லைன் மூலம் முறுக்கு மெஷின்களை பெற்றுக்கொண்டு முறுக்கு மாவுகளை சேர்த்து பலவிதமான மாடல்களில் முறுக்குகள் செய்யலாம். அந்த முறுக்கு அச்சியின் விலை 500 ரூபாய் மட்டும்தான். இந்த முறுக்கு மெஷினில் உள்ள சிறப்பு என்னவென்றால் 20- க்கும் மேற்பட்ட முறுக்கு வகைகளை செய்யலாம்.
அதிக அளவில் முறுக்குகளை தயாரிக்கும் பொழுது அதற்கான மெஷின்களும் ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம். ஆட்டோமேட்டிக் முறுக்கு மெஷின்கள் ஆன்லைனில் 25,000 ரூபாய்க்கு மேல் வரையும் இருக்கிறது.
முறுக்கு விற்பனை செய்யும் முறை:
முறுக்குகளை தயாரித்த பிறகு அதனை நீங்கள் பேக்கிங் செய்து மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களிலும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், பெட்டி கடைகள் போன்றவற்றில் விற்பனை செய்யலாம்.
நீங்கள் பாக்கெட்டில் பேக்கிங் செய்யும் பொழுது பேக்கிங்க்கு தகுந்தது போல விலைகளை வைத்து கொள்ளலாம். அதாவது 5 முறுக்குகளை 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் என்று முறுக்கின் தரத்திற்கு ஏற்ப விலைகளை வைத்துக்கொள்ளலாம்.
தேவைப்படும் முதலீடு மற்றும் கிடைக்க கூடிய வருமானம்:
இந்த முறுக்கு செய்யும் தொழிலை தொடங்குவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வரை தேவைப்படும்.
இந்த தொழிலை செய்யும் பொழுது உங்களுக்கு கிடைக்க கூடிய வருமானம் நீங்கள் தயாரிக்கும் முறுக்குகளை பொறுத்து கிடைக்கும். தோராயமாக 5 ரூபாய் பாக்கெட்டில் 500 பாக்கெட்களும், 10 ரூபாய் பாக்கெட்டில் 100 பாக்கெட்களும், 20 ரூபாய் பாக்கெட்டில் 25 பாக்கெட் என்று தயாரித்து விற்பனை செய்யும் பொழுது ஒரு நாளைக்கு மட்டுமே 4000 ரூபாய் வரையும் வருமானம் கிடைக்கும். வாரம் 20,000 -க்கும் மேல் வரை வருமானம் பெறலாம்.
மேலும் இந்த தொழில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இந்த தொழிலை செய்து வெற்றி பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |