வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..!

Updated On: February 28, 2025 4:43 PM
Follow Us:
New business ideas tamil
---Advertisement---
Advertisement

போட்டி இல்லாத புதிய தொழில் செய்து வருமானம் பெறலாம்..! New business ideas tamil:-

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நம்முடைய பதிவில் தினந்தோறும் ஒரு பதிவினை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான பதிவினை பற்றி தான் பார்க்க போகிறோம். தொழில் செய்யணும் அப்படினா தனியாக ஒரு இடம் வேண்டுமோ என்று நினைக்காதீர்கள். இந்த தொழிலை உங்கள் வீட்டிலையே சிறிய இடம் இருந்தாலே போதுமானது. என்ன தொழில், எப்படி செய்யணும் என்று முழு பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..?

கட்டிட அமைப்பு:-

பத்துக்கு, பத்து அளவு கொண்ட ஒரு சிறிய அரை இருந்தால் போதும், இந்த தொழில் துவங்கலாம். அதனால் இந்த தொழிலுக்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலையே சிறிய இடம் போதும்.

புதிய தொழில் (New business ideas tamil) பற்றிய விவரம்:

போட்டி இல்லாத புதிய தொழில்

பழைய நியூஸ் பேப்பரை மொத்தமாக விலைக்கு வாங்க வேண்டும். இந்த பழைய நியூஸ் பேப்பரை பேப்பர் ஸ்ரேட்டர் மிஷினில் (paper shredder machine) கட் செய்ய வேண்டும்.

இவ்வாறு கட் செய்த பேப்பரை வைத்து என்ன தொழில் செய்வது என்று யோசிக்கின்றிர்களா..? இவ்வாறு கட் செய்த பேப்பரை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யலாம். அவர்கள் இந்த கட் செய்த பேப்பரை எதற்கெல்லாம் பயன்படுத்துவார்கள் என்றால் பொம்மை, கண்ணாடியால் செய்த பொருட்கள், மண்பாண்டங்கள், பழங்கள் போன்ற பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக அனுப்புவதற்கு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வெளிநாட்டிற்கு பொருட்களை பேக்கிங் செய்து அனுப்புவதற்கு இந்த கட் செய்த பேப்பர்கள் அதிகம் தேவைப்படுகிறது.

இந்த புதிய தொழிலை வடமாநிலங்களில் மட்டுமே செய்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இது வரை யாரும் அதிகமாக செய்யாத தொழில் என்பதால். போட்டிகள் அதிகம் இருக்காது.

பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!

சந்தை வாய்ப்பு எப்படி இருக்கும் ?

இந்த கட் செய்த பேப்பரை பொருட்களை பேக்கிங் செய்து அனுப்பும் நிறுவனங்களுடன் டீலிங் வைத்துக்கொண்டு சப்ளை செய்யலாம். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், கோயமுத்தூர், சேலம், ஈரோடு, சென்னையில் (கோயம்பேடு, ஸ்ரீபெரம்பதூர், அம்பத்தூர்) போன்ற இடங்களில் இந்த கட் செய்த பேப்பரின் தேவை அதிகம் இருக்கும். குறிப்பாக தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகம் இருப்பதினால் தயக்கம் இல்லாமல் இந்த தொழிலை துவங்கலாம்.

மூலப்பொருட்கள்:-

போட்டி இல்லாத தொழில்

இந்த புதிய தொழில் பொறுத்தவரை தேவைப்படும் மூலப்பொருட்கள் என்றால் பழைய நியூஸ் பேப்பர் தான். ஒரு கிலோ நியூஸ் பேப்பரின் விலை 8 முதல் 10 ரூபாய் வரை தான் இருக்கும். இந்த நியூஸ் பேப்பரை மொத்தமாக வாங்கி வைத்து கொண்டு கட் செய்ய பயன்படுத்தலாம்.

சுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..! தினமும் வருமானம்

இயந்திரம்:-

இந்த சுயதொழில் பொறுத்தவரை Paper Shredder Machine தேவைப்படும். இந்த இயந்திரம் 25,000/- முதல் 1,50,000/- வரை கிடைக்கின்றது. இந்த paper shredder machine-னை www.alibaba.com, www.amazon.in, dir.indiamart.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆடர் செய்தும் வாங்கி கொள்ளலாம். 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2025
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!