Onion Blossom Fries Making Business in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் இன்றைய கால கட்டத்தில் பணத்தின் தேவை என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் அனைவருமே சுயதொழில் ஆரம்பிக்க விரும்புகிறார்கள். ஆனால் என்ன தொழில் தொடங்குவது என்பதில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும்.
அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Onion Blossom Fries தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Onion Blossom Fries Making Business Plan in Tamil:
இன்றைய கால கட்டத்தில் துரித உணவுகளை உண்பதில் மக்களுக்கு மிகவும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு புதிய புதிய துரித உணவுகளை தேடி தேடி சாப்பிடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும்.
அதனால் நீங்கள் இந்த Onion Blossom Fries தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
தேவையான மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள வெங்காயம், Blooming Onion Cutter, மசாலா மற்றும் எண்ணெய் ஆகியவை தேவைப்படும்.
தேவையான முதலீடு:
1 கிலோ வெங்காயத்தின் விலை தோராயமாக ரூபாய் 32, 1 கிலோ மசாலாவின் விலை தோராயமாக ரூபாய் 150 மற்றும் Blooming Onion Cutter-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 350 ஆகும்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் தொடங்குவதற்கு முன்னால் நீங்கள் எந்த மாதிரி செய்ய போகின்றீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இந்த தொழிலை நீங்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் கடை வைத்து செய்யலாம் அல்லது சிறிய தள்ளுவண்டி கடையாகவும் வைத்தும் செய்யலாம்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடைய தோல்களை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Blooming Onion Cutter-ல் வைத்து நன்கு பூ விரிந்திருப்பதுபோல் நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு அதனை மசாலாவில் போட்டு புரட்டி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து விற்பனை செய்யுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
இந்த தொழில் மிக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கடை எங்கு வைக்கிறீர்கள் என்பது தான். கூட்டம் அதிகம் வரக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு பெரிய கடைக்கு வாசலிலோ அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகிலோ வைப்பதால் உங்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும்.
மேலும் உங்கள் கடையை மாலை நேரத்தில் ஆரம்பித்தால் மிகவும் நன்று.
வருமானம்:
தோராயமாக 1 Onion Blossom Fries-ன் விலை 50 ரூபாய் முதல் 60 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 200 Onion Blossom Fries-னை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த Onion Blossom Fries தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ இந்த தொழிலை மட்டும் செய்தால் வாரம் 1,19,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |