பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய அருமையான சுயதொழில்..!

Advertisement

பானி பூரி தயாரிப்பு தொழில்..! Panipuri Business Ideas..!

Small Profitable Business Ideas in Tamil:- இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அனைவருமே ஏதாவது சுயதொழில் துவங்க வேண்டும் என்று விரும்புகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் அனைவரும் வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு தின்பண்டம் தான் பானி பூரி. சாலை ஓரங்களில், திருவிழாக்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் விற்பனை செய்வார்கள்.

இந்த பானி பூரி விற்பனை செய்பவர்கள் பொதுவாக சால்னாவை வீட்டிலேயே தயார் செய்துவிடுவார்கள், ஆனால் பூரியை பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி பயன்படுத்துகின்றன. எனவே இந்த பூரிகளை நாம் தயார் செய்து விற்பனையாளர்களிடம் விற்பதன் மூலம் நல்ல வருமானம் காணமுடியும். சரி இந்த தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதற்கான இயந்திரம், சந்தைவாய்ப்பு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இயந்திரத்தின் விலை 15,000/- மாத வருமானம் 1 லட்சம்..!

Small Profitable Business Ideas in Tamil..!

இடம்:-

வீட்டில் இருந்து செய்யக்கூடிய தொழில் என்பதால், பானி பூரிகளை தயார் செய்வதற்கு ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.

மூலப்பொருட்கள்:-

இந்த பூரி தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னவென்றால் மைதா அல்லது கோதுமை மாவு தேவைப்படும், அடுத்ததாக பூரிகளை பொரித்தெடுப்பதற்கு எண்ணெய், பின் தயாரித்த பூரியை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் ஆகியவை தேவைப்படும். அனைத்து மூலப்பொருட்களும் சந்தைகளில் எளிதாகவே நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் தான், எனவே தேவைகளுக்கு தகுந்தது போல் மூலப்பொருட்களை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேவைப்படும் இயந்திரம்:-

panipuri making machine

இது தான் பானி பூரி மிஷின் (panipuri making machine) இந்த இயந்திரம் தற்பொழுது அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானி பூரி மிஷின் விலை 80,000/- விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொழில் பொறுத்தவரை இயந்திரத்திற்கு தான் அதிக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

இயந்திரத்தை இயக்கும் முறை:-

இந்த இயந்திரத்தை இயக்குவது என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இவை முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கக்கூடியது. மிஷினில் தயாரித்த பூரி மாவுகளை வைத்தால் சிறு சிறு பூரிகளாக இயந்திரம் கட் செய்து தரும்.

பூரிகளை கட் செய்யப்பட்டு வெளிவரும்பொழுது மீதமுள்ள மாவுகளை மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே போட்டுவிட்டால் அந்த மாவுகளை திரும்ப பூரிகளாக இயந்திரம் கட்செய்து தரும்.

இவ்வாறு கட்செய்த பூரிகளை நன்றாக காயவைக்க வேண்டும். பிறகு எண்ணெய்யில் பொரித்தால் பூரிகள் தயார் இதனை பேக்கிங்கின் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

முதலீடு:-

இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 1 லட்சம் தேவைப்படும்.

சந்தை வாய்ப்பு:-

இந்த சுயதொழில் பொறுத்தவரை எங்கெல்லாம் பானி பூரி கடை வைத்திருக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களிடம் நேரடியாக தாங்கள் தயார் செய்த பூரிகளை விற்பனை செய்து ஆர்டர்களை பெறலாம்.

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

வருமானம்:-

தாங்கள் தயார் செய்த 1 கிலோ பானி பூரிகளை ரூபாய் 160 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு கிலோவிற்கு ரூபாய் 80 முதல் 120 ரூபாய் வரை லாபம் பெறமுடியும். தாங்கள் வடிக்கையாளர்களிடமெல்லாம் ஆர்டர்களை பெற்ற பிறகு மாதம் மாதம் 500 கிலோ பானி பூரிகளை விற்பனை செய்யும்பொழுது தங்களுக்கு மாதம் ரூபாய் 40 ஆயிரம் முதல் ரூபாய் 60 ஆயிரம் வரை வருமானம் பெறலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல்
Advertisement