புதிய வருடத்தில் நல்ல தொழிலை செய்து முன்னேறுவதற்கு என்றும் முதலிடத்தில் உள்ள இந்த தொழிலை செய்தால் போதும்..!

paper bag business ideas in tamil

சுயதொழில் என்ன செய்யலாம்

நாம் ஒவ்வொரு வருடமும் நினைப்பது நாமும் எத்தனை நாட்களுக்கு தான் மற்றவரிடம் மாத சம்பளத்திற்கு வேலை செய்வது எப்படியாவது சொந்தமாகா ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும் என்று தான். ஆனால் நாம் அப்படி நினைப்பதோடு சரி அதற்கான முயற்சியை யாரும் செய்வதில்லை. அதற்கான காரணமாக பலரும் கூறுவது என்னவென்றால் என்ன தொழில் செய்வது என்று மற்றும் அதற்கான முதலீடு என்னவென்று சரியாக தெரியவில்லை என்று தான். இனி நீங்கள் இது மாதிரி எதுவும் தெரியவில்லை என்று புலம்ப வேண்டாம். இந்த புது வருடத்தில் எப்போதும் அதிக வருமானம் மற்றும் அதிக டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

லாபகரமான தொழில்:

இன்றைய நவீன காலத்தில் பிளாஸ்டிக் பைகளை யாரும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. அதற்கு மாறாக அனைவரும் பேப்பர் பையினை தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் Paper Bag Business செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இத்தகைய Paper Bag Business எப்போதும் டிமெண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. ஏனென்றால் அனைவரும் ஏதாவது ஒரு பொருளை தினமும் வாங்கி கொண்டு தான் இருக்கிறோம் அதனால் இந்த Paper Bag அனைத்து கடைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

  • கிராப் பேப்பர்
  • Handle Not
  • Electric Paper Bag Making Machine

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு 3 மூலப்பொருள் மட்டும் போதும். இந்த Electric  Paper Bag Making Machine-ன் தோராய விலை 2,00,000/- ஆனால் மிஷினின் மாடலை பொறுத்து அதன் விலை வேறுபடும்.

மொத்தமாக இந்த தொழிலுக்கான முதலீடு என்று பார்த்தால் 2,50,000 ஆகும். இந்த மிஷினை நீங்கள் ஆன்லைன் தான் வாங்க முடியும். மற்ற இரண்டு பொருட்களையும் நீங்கள் Stationery கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

தேவைப்படும் இடம்:

இந்த Paper Bag Business- யை  நீங்கள் செய்வதற்கு ஒரு பெரிய அளவிலான இடம் மின்சார வசதியுடன் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்⇒ விளம்பரம் செய்தால் மட்டும் போதும்..! பணத்தை வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம்..!

தயாரிக்கும் முறை:

daily income business ideas in tamil

நீங்கள் பேப்பர் Bag தயாரிக்க மிஷின் வாங்கும் இடத்திலையே அதனை எப்படி Operate செய்து தயாரிக்க வேண்டும் என்ற முழு பயிற்சியும் உங்களுக்கு அளிக்கப்படும்.

அதனை நீங்கள் அப்படியே பயன்படுத்தி இந்த மிஷின் மூலம் 1 கிலோ மூலப்பொருட்களுக்கு 20 Bag– கள் தயாரிக்கலாம்.

அதுபோல இந்த மிஷினை பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் 1000 Bag– களை தயாரிக்கலாம். அப்படி என்றால் நீங்கள் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வேலை செய்தால் போதும் 5,000 Bag- களை மிகவும் எளிமையாக தயாரித்து விடலாம்.

விற்பனை ஆகும் இடம்:

small business ideas in tamil

நீங்கள் தயாரித்த Paper Bag- களை Department ஸ்டோர், Shopping Mall, ஜவுளி கடை மற்றும் Fancy கடை ஆகிய இடங்களில் பேப்பர் Bag அதிகமாக தினமும் தேவைப்படுகிறது. அதனால் இந்த இடங்களில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

விற்பனை செய்யும் முறை:

ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 5,000 பேப்பர் Bag- களை விற்பனை செய்தீர்கள் என்றால் 7,500 ரூபாய் வருமானம் பெற முடியும். இதுபோலவே நீங்கள் தினமும்  விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 52,500- ரூபாயும் ஒரு மாதத்திற்கு 2,25,000 ரூபாயும் வருமானம் பெறலாம். 

இப்போது இந்த தொழிலை செய்து புது வருடத்தில் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ எதிர்காலத்தில் இந்த தொழில் தான் அதிக டிமெண்ட்டுடன் வளம் வரக்கூடிய தொழிலாக இருக்க போகிறது..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil