இந்த தொழிலை நீங்கள் செய்தால் Product-ம் வீணாகாது தொழிலில் Loss-ம் வராது..!

paper cup business ideas in tamil

தினசரி வருமானம் தரும் தொழில்

பொதுவாக யாராக இருந்தாலும் எவ்வளவு நாள் தான் நாமும் மற்றவரிடம் மாத சம்பளத்திற்கு வேலை செய்வது என்ற ஒரு எண்ணம் வரும். சரி சொந்தமாக ஏதாவது ஒரு சுய தொழிலை செய்து அதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம் என்று நினைக்கும் போது என்ன தொழில் செய்வது என்பது ஒரு குழப்பமாக இருக்கும். அதனால் உங்களுக்கு ஏற்ற மாதிரியான பயனளிக்கும் வகையில் ஒரு சுயதொழில் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தால் போதும் உங்களுக்கு Product-ம் வீணாகாது தொழிலில் எந்த வித Loss-ம் ஏற்படாமல் என்றும் நீங்கள் அதிக வருமானத்தை மட்டும் பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

லாபகரமான தொழில்:

அதிக வருமானம் மற்றும் அதிக லாபம் தரக்கூடிய Paper Cup Business-ஐ பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழில் இப்போது மட்டும் இல்லாமல் வருங்காலத்திலும் நல்ல டிமாண்ட் உள்ள ஒரு தொழிலாக இருக்கிறது.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

paper cup making business plan in tamil

  1. PE Coated Paper- 150gsm To 200gsm
  2. Die Cutting Mold
  3. Automatic Paper Cup Making Machine
  4. Die Cutting Machine
  5. Machine Die

இந்த தொழிலை செய்வதற்கு தேவைப்படும் இயந்திரத்தின் விலை அதன் மாடல்களை பொறுத்து மாறுபடும். அதனால் இந்த தொழிலை செய்வதற்கு தோராயமாக 7 லட்சம் முதலீடு தேவைப்படும்.

தேவைப்படும் இடம்:

நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு பெரிய அளவிலான இடமும் மற்றும் மின்சார வசதியும் தேவை.

இதையும் படியுங்கள்⇒ குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்யணுமா..! அப்போ இதை பாருங்கள்..!

How to Start Paper Cup Business:

தினசரி வருமானம் தரும் தொழில்

Paper Cup Business-யை  நீங்கள் தொடங்குவதற்கு மிஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எவ்வாறு Operate செய்வது மற்றும் Service செய்வது என அனைத்து விதமான பயிற்சிகளும் உங்களுக்கு 2 நாட்கள் அளிக்கப்படும்.

அதேபோல இந்த தொழிலை செய்வதற்கான தேவையான அனைத்து மூலப்பொருட்களை உங்களுக்கு வழங்கப்படும்.

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள PE Coated Paper- னை Automatic Paper Cup Making Machine- ல் வைத்தால் போதும் உங்களுக்கு Cup போன்ற அமைப்பினை கொடுத்து விடும்.

அடுத்ததாக அதனை Die Cutting Machine- ல் வைத்தால் உங்களுக்கு முழுமையான Paper Cup தயராகிவிடும்.

இதனுடைய தயாரிப்பு செயல்முறை என்பது மிகவும் எளிமையாகும்.

விற்பனை செய்யும் முறை:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Paper Cup-ஐ 100 ஆக பிரித்து தனியாக ரோல் போல பாலீத்தின் கவரால் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

தோராயமாக 100 Cup-ன் விலை 80 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் ஒரு நாளைக்கு நீங்கள் 50 பேப்பர் கப் ரோல் விற்பனை செய்தீர்கள் என்றால் தோரயமாக 4,000 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.

அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு 28,000 ரூபாய் முதல் 31,500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒரு மாதத்திற்கு தோராயமாக 1 லட்சம் வரையிலும் லாபம் பெறலாம்.

விற்பனை ஆகும் இடம்:

 லாபகரமான தொழில்

பெரிய சிறிய மளிகை கடை, டீ கடை, ஜூஸ் கடை, Coffee Shop, Department Store, Shopping மால் மற்றும் Wholesale கடை என அனைத்து இடங்களிலும் நீங்கள் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலுக்கு வருக்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும்..! இன்றே தொடங்கி லாபத்தை பாருங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil