பெண்கள் வீட்டில் இருந்து மாதம் 20,000 சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..!

Advertisement

பெண்கள் வீட்டில் இருந்து மாதம் 20,000 சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..! Paper Plate Manufacturing Business in Tamil..!

இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு இருக்கும் ஆசையில் ஒன்று தான் சொந்தமாக தொழில் தொடங்குவது. அதிலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருந்தபடியே தொழில் தொடக்கி தங்களால் முடிந்த உதவியை தன் குடும்பத்திற்கு செய்யவேண்டும் என்றுவிரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். அதாவது பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் மாதம் சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பு பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன தொழிலில், எவ்வளவு முதலீடு தேவைப்படும், அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்?

சுயமாக தொழில் தொடங்க நமது பதிவில் நிறைய தொழில் சார்ந்த யோசனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பேப்பர் பிளேட் தயாரிப்பு தொழில். இந்த தொழிலுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. ஆக பெண்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.

இடம்:

இந்த பேப்பர் பிளேட் தயாரிப்பு தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய அறையில் செய்யலாம். இந்த தொழிலுக்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியம் இருக்காது. உங்கள் தொழில் நமக்கு வளர்ச்சியடையும் பொது வேண்டுமென்றால் தனியாக இடம் அமைத்து தொழிலை தொடங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
3 மணிநேரம் வேலை செய்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் தொழில்..!

இயந்திரம்:

பேப்பர் பிளேட்டை தயார் செய்வதற்கு உங்களுக்கு paper plate machine தேவைப்படும். இதனுடைய விலை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் 65,000 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மூலப்பொருள் பேப்பர் ரோல் தான். இந்த பேப்பர் ரோல் Brown, Silver, White, Pulp போன்ற நிறங்களும் மற்றும் வகைகளில் கிடைக்கிறது. இதனுடைய நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றதுபோல் ஒரு கிலோ பேப்பர் ரோலில் விலை நிலவரம் மாறுபடும். இது தவிர தயார் செய்த பேப்பர் பிளேட்டை பேக்கிங் செய்வதற்கு பேக்கிங் கவர் தேவைப்படும்.

முதலீடு:

பேப்பர் பிளேட் தொழிலை தொடங்க குறைந்தபட்சம் உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு தொழில் செய்ய வெறும் 10,000/- முதலீடு போதும்.. தினமும் நல்ல லாபம் பெறலாம்..!

தயாரிக்கும் முறை:

பேப்பர் பிளேட்டை தயார் செய்வது ஒன்று பெரிய வேலை இல்லை. பேப்பர் ரோலை இயந்திரத்தில் வைத்து, இயந்திரத்தை பிரஸ் செய்தாலே போதும் பேப்பர் தட்டு தயாராகிவிடும். இருப்பினும் தட்டின் அளவுகளுக்கு ஏற்றது போல் இயந்திரத்தின் அச்சுக்கலை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். இந்த இயந்திரத்தில் நீங்கள் பாக்குமட்டை தட்டு கூட உற்பத்தி செய்ய முடியும். இந்த இயந்திரத்தில் பத்து நிமிடத்தில் 100 பேப்பர் தட்டுகளை தயார் செய்யமுடியும். ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1000 பேப்பர் தட்டுகளை தயார் செய்திட முடியும். இவ்வாறு தயார் செய்த பேப்பர் தட்டுகளை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

குறிப்பு:

இயந்திரம் இயக்கும் முறை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இயந்திரம் வாங்கும் இடத்திலேயே உங்களுக்கு இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும் என்ற முழு பயிற்சியும் வழங்கப்படும்.

சந்தை வாய்ப்பு:

மல்லிகை கடை, டிபார்மண்ட் ஸ்டோர், பெட்டிக்கடையில், பேக்கரி என்று நீங்கள் தயார் செய்த பேப்பர் தட்டுகளை நேரடியாக எடுத்து செய்து விற்பனை செய்யலாம். இதுமட்டும் இல்லாமல் கோவில், உங்கள் தெரிவில் நடைபெறும் சிறு சிறு விசேஷங்களுக்கு பேப்பர் தட்டிகளை தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் நல்ல வருமானம் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

வருமானம்:

பெண்கள் வீட்டில் இருந்து ஓய்வு நேரங்களில் பேப்பர் தட்டுகளை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் மாதம் தோறும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். அதுவே முழுநேரமாக தொழில் தொடங்கும் போது மாதம் 20,000 மேல் கூட வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement