இரண்டு மணி நேரம் வேலை ஒரு நாளுக்கு 1000 வருமானம் தரும் பகுதி நேர பிசினஸ்..!

பகுதி நேர பிசினஸ் – Part Tiime Business in Tamil

புதிதாக பிசினஸ் ஆரம்பிக்க விரும்பும் அனைத்து நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதிவில் தினமும் இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் போதும் 1000 ரூபாய் வரை வருமானத்தை பெற கூடிய சில தொழில்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அந்த தொழில்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.. மேலும் இது போன்ற பலவகையான Business Ideas-ஐ பற்றி பார்க்க இப்பதிவின் இறுதியாக அட்டவணையில் குடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க ஒரு நாளுக்கு 1000 ரூபாய் வருமானம் தரக்கூடியதொழில்களை இப்பொழுது பார்க்கலாம்.

News Paper Business:

News Paper Business

என்னதான் டெக்னலாஜி உலகம் என்றாலும் கூட இன்றளவு காலை நேரங்களில் நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நீண்ட நேரம் பயணம் செய்யும்பொழுது news paper படிக்கும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. ஆக தினமும் காலை 2 மணி நேரம் மட்டும் உங்கள் ஊரில் உள்ள தெருக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் News Paper விற்பனை செய்தீர்கள் என்றாலே ஒரு நாளைக்கு உங்களுக்கு 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

மெஹந்தி டிசைன்:

மெஹந்தி டிசைன்

உங்களுக்கு நன்றாக மெஹந்தி போடத்தெரியும் என்றால் நீங்களும் தினமும் நல்ல வருமானத்தை பெற முடியும். அதாவது இப்பொழுது எல்லாம் ஒரு கைகளுக்கு மெஹந்தி பேடுவதற்கே அழகு நிலையங்களில் 500 ரூபாய் வரை பணம் வசூலுகின்றன. ஆக நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் ஒரு நபருக்கு மெஹந்தி போட்டாலே 1000 ரூபாய் வரை வெறும் 2 மணி நேரத்தில் சம்பாரித்துவிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு முறை முதலீட்டிற்கே ஒரு நாளுக்கு லட்ச கணக்கில் லாபம் தரும் தொழில்.. 10 x 10 இடம் இருந்தால் போதும்

Food Business:

variety rice

மதிய நேரங்களில் மட்டும் வெரைட்டி சாதம் செய்து விற்பனை செய்யலாம். அதாவது நகர்புறங்கள் என்றால் அலுவலகங்கள், ஹாஸ்டல், கட்டுமான வேலைகள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் சென்று விற்பனை செய்யலாம். கிராமப்புறங்கள் என்றால் வயல்களில் வேலை செய்பவர்களிடம் சென்று விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.

மேல் கூறப்பட்டுள்ள மூன்று தொழில்களின் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவிட்டார்கள் என்றாலே தினமும் 1000 ரூபாய்க்கு மேலும் கூட நல்ல வருமானத்தை பெறமுடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022