பெட்ரோல் பங்க் தொடங்குவது எப்படி? | Petrol Bunk Business Idea in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நாம் வியாபாரம் பகுதியில் பார்க்க போகிறது petrol bunk வைப்பது எப்படி என்பதுதான். இன்றைய சூழ்நிலையில் நஷ்டம் இல்லாத தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் எல்லாருக்கும் தோன்றும். இப்போது இருக்கும் கால கட்டத்தில் எல்லாரிடமும் இருக்கிறது இரு சக்கர வாகனம். இந்த பரபரப்பான உலகத்தில் அதிகமான அத்தியாசியமான ஒரு பொருள் பெட்ரோல் தான். இதனால் நஷ்டம் இல்லாத தொழில் பெட்ரோல் பங்க்தான். அதனை வைப்பதற்கு என்னென்ன தேவை? எவ்வளவு பணம் தேவை என்பதையும் அதனை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
பெட்ரோல் பங்க் வைக்க முதல் செய்ய வேண்டியவை:
பெட்ரோல் பங்க் இரண்டு வகைகளாக வைக்கலாம். முதலில் பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்திடம் நேரடியாக சென்று பெட்ரோல் பங்க் நிறுவுவதற்கு முழு முதலீட்டையும் முதலீடு செய்து தொழிலை தொடங்கலாம்.
இல்லையென்றால் அவர்களுக்கு நாம் சொந்தமாக இடங்களை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் நாம் இந்த தொழிலை தொடங்கலாம்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க |
பெட்ரோல் பங்க் நிறுவனம்:
- HP Hindustan petroleum
- Bharat petroleum
- Indian oil
- Essar oil
- Reliance petroleum
மேலே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் HP Hindustan petroleum, Bharat petroleum, Indian oil இந்த மூன்று நிறுவனம் மட்டும் நமக்கு முழுமையாக பெட்ரோல் பங்க் வைப்பதற்கும், லாபம் கிடைப்பதற்கும் அதிகமான அதிகாரங்கள் தருகிறார்கள்.
மற்ற நிறுவனம் நம்முடைய இடத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அவர்களே தொழிலை நடத்தி மாதம் ஒரு தொகையை நமக்கு தருகிறார்கள்.
பெட்ரோல் பங்க் ஆரம்பிக்க முதல் நிலை | Petrol Bunk Dealership
முதலில் நிறுவனத்திற்கு நேரடியா சென்று தொடர்பு கொண்டு அவர்களிடம் நமக்கு இருக்கும் இடத்தை பற்றி முழு விவரங்களை பேசுவார்கள். அதன் பின் நிறுவனத்தின் ஆட்கள் நம் இடத்தை பார்த்து தகுதியை அறிந்த பிறகு அவர்கள் செய்தித்தாள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அவர்களுக்கு தேவைப்படும் செய்திகளை விளம்பரம் செய்வார்கள். அதன் மூலம் நாம் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தேவையான எல்லா தகுதிகளை அறிந்த பிறகு தொழிலை தொடங்க அறிவிப்பு தருவார்கள்.
பெட்ரோல் பங்க் ஆரம்பிக்க இடவசதி:
நமக்கு முக்கியமாக பெட்ரோல் பங்க் தொடங்க இடம் தேவை.
எவ்வளவு இடம் தேவை என்றால் சிட்டிக்குள் 20*20 மீட்டர், அதாவது 1300 சதுர அடி தேவைப்படும் அல்லது தேசிய நெடுஞ்சாலையில் 40*40 மீட்டர் அதாவது 5000 சதுர அடி தேவைப்படும்.
நாம் பெட்ரோல் பங்க் வைக்கும் இடத்திலிருந்து 5000 தூரம் இடைவெளி பிறகு வேறு பெட்ரோல் பங்க் இருக்க வேண்டும்.
தினசரி லாபம் தரும் தொழில்களின் பட்டியல் |
பெட்ரோல் பங்க் ஆரம்பிக்க கல்வி தகுதி:
- பெட்ரோல் பங்க் வைக்க அதிகமாக படிக்க வேண்டிய தேவையில்லை. குறைந்த பட்சம் 10-th /12-th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பெட்ரோல் பங்க் ஆரம்பிக்க வயது தகுதி:
- பெட்ரோல் பங்க் வைக்க வயது தகுதி குறைந்தபட்சம் 21 வயது முதல், அதிகபட்சமாக 55 வயது இருத்தல் வேண்டும்.
பெட்ரோல் பங்க் ஆரம்பிக்க முதலீடு:
- முதலில் நமக்கு சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருத்தல் வேண்டும்.
- கையிருப்பு ACCOUNT-ல் பணம் Rs.12 லட்சம் இருத்தல் வேண்டும்.
- நிறுவனத்திற்கு Rs.30 லட்சம் முதல் Rs.40 லட்சம் வரை முதலீடு தொகை செய்ய வேண்டும்.
- முதலீட்டிற்கு மொத்தமாக சொந்த இடத்தை தவிர Rs.75 லட்சம் வரை தேவைப்படும்.
இந்த தொழில் செஞ்சா வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் |
பெட்ரோல் பங்க் விதிமுறைகள்:
- பெட்ரோல் பங்க் வேலை ஆட்கள் அதிகபட்சமாக 7 முதல் 10 ஆட்கள் வரை தேவைப்படும்.
- பெட்ரோல் பங்க் நேரம்: காலை 6 மணி இரவு 12 மணிவரை.
- சிலர் 24 மணி நேரம் வைத்திருக்கிறார்கள்.
வரவு செலவுகள்:
- ஒரு நாளுக்கு 2,000 லிட்டர் முதல் 4,000 லிட்டர் வரை, மாதம் டீசல் 60,000 லிட்டர் முதல் 1,20,000 லிட்டர் வரை விற்பனை ஆகும். இதற்கு Commission ஒரு லிட்டருக்கு Rs. 1.25 to Rs. 2 வரை வரும். இதனை கணக்கிடுதலில் 90,000 வரை லாபம் டீசலில் கிடைக்கும்.
- பெட்ரோல் விற்பனையில் 1 லிட்டருக்கு Commission Rs. 2/- முதல் Rs. 3/- வரை கிடைக்கும். அதிகபட்சமாக Rs 4,05,000/- வரை லாபம் கிடைக்கும்.
- எலக்ட்ரிசிட்டி பில்: அதிகபட்சமாக 30,000 வரை வரும்.
- இதர செலவுகள் தவிர லாபம் குறைந்தபட்சம் Rs. 67,500/- முதல் அதிகபட்சமாக Rs. 2,10,000/- வரை லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil |