வீட்டில் 10 நொடியில் ஒரு பீஸ் தயாரிக்கலாம், மாதம் 40,000/- வருமானம் தரும் தொழில்..!

PVC Bend Making Business in Tamil

PVC Bend தயாரிப்பு தொழில் | PVC Bend Making Business in Tamil

வீட்டிலேயே புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்து ஆரம்பிக்க கூடிய ஒரு அருமையான சுயதொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம்.. அதாவது PVC Bend Making Business ஐடியா பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழில் தொடங்க அதிக முதலீடு தேவை இல்லை. தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை நமது உழைப்பு மட்டுமே மூலதனமாக இருக்கும். சரி வாங்க இந்த PVC Bend Making Business எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

PVC Bend Making Business எப்படி ஆரம்பிக்கலாம்:

இந்த PVC Bend Making Business-ஐ இரண்டு வகைகளாக செய்யலாம். ஒன்று Manual மற்றொன்று Automatic ஆகும். இன்று நாம் இந்த இரண்டு வகையை பற்றியும் பார்க்கலாம். முதலாவதாக Manual-லாக எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

Manual Methods:

மூலப்பொருள்:

இந்த PVC Bend தயார் செய்வதற்கு தேவைப்படும் முக்கியமான ஒன்று PVC Pipe தான். இந்த பைப்பை பயன்படுத்தி தான் நாம் PVC Bend தயார் செய்ய போகிறோம். 3 மீட்டர் கொண்ட PVC Pipe ஒன்று கடைகளில் 8 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதனை நாம் தேவையான அளவு வாங்கி கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
200 ரூபாய் முதலீட்டில் தினமும் 3000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

தயாரிக்கும் முறை:

நாம் வாங்கிய PVC Pipe-ஐ அளவுகளுக்கு தகுந்தது போல் அதாவது 150 MM முதல் 225 MM வரை கட் செய்து கொள்ளலாம். இருப்பினும் பெருபாலும் பயன்படுத்தும் PVC Bend-யின் அளவு 150 MM தான். ஆக PVC Pipe-ஐ 150 MM-ற்கு கட் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறு கட் செய்த PVC பைப்பை 170 டிகிரி வரை நாம் ஹிட் செய்ய வேண்டும். ஹீட் செய்வதற்கு மிக எளிமையான வழி வெந்நீரில் முக்கியெடுப்பது தான். அதாவது 170 டிகிரி வெந்நீரில் கட் செய்த பைப்பை முக்கி எடுத்து கொள்ளவும்.

பிறகு உடனே மேல் படத்தில் உள்ளது போல் ஒரு இரும்பு ராடை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் வெந்நீரில் முக்கிய PVC பைப்பை Bend செய்தால் அதுவே நன்றாக வளைந்து வந்துவிடும்.

இந்த பைப்புடன் Adjustment பாதிப்புகளை இணைப்பதற்காக, PVC Bend-யின் இரு ஓரங்களிலும் கொஞ்சம் விரிவு செய்ய வேண்டும். அதற்கு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் பைப்பின் ஓரத்தில் அளவை விட கொஞ்சம் ஒரு இஞ் பெரிதாக ஒரு ராடு தயார் செய்து. Bend செய்த பைப்பின் சூடு ஆறுவதற்குக்குள் இரண்டு பக்கமும் இந்த ராடில் ஒருமுறை அழுத்தி எடுத்தால் போதும். Bend செய்த பைப்பின் இரு ஓரங்களிலும் ஓட்டையானது கொஞ்சம் விரிவடைந்து விடும்.

அவ்வளவு தான் PVC Bend தயாராகிவிடும். இதனை பேக்கிங் செய்து கடைகளில் விற்பனை செய்யலாம்.

உற்பத்தி, முதலீடு மற்றும் வருமானம்:

உற்பத்தி

ஒரு PVC பைப்பை 150 MM அளவிற்கு கட் செய்தால் நமக்கு 20 பீஸ் கிடைக்கும். ஆக 10 பிவிசி பைப்பை 150 MM அளவிற்கு கட் செய்தால் நமக்கு 200 பீஸ் கிடைக்கும். கட் செய்த பைப்பை PVC Bend-ஆக தயாரித்தால். ஒரு PVC Bend-யின் விலை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

Manual-ஆக நாம் செய்யும் பொழுது ஒரு மணி நேரத்திற்கு 200 PVC Bend தயார் செய்யலாம். ஒரு நாளுக்கு 8 மணி நேரம் என்று தயார் செய்யும் போது 2000 பீஸ் வரை உற்பத்தி செய்ய முடியும்.

வருமானம்:

ஆக ஒரு நாளுக்கு 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 30 நாள் தயார் செய்யும் பொழுது 60,000 வரை வருமானம் கிடைக்கும்.

முதலீடு:

இந்த தொழிலை நாம் Manual-ஆக, செய்கிறோம் என்றால் ஒரு மாதத்திற்கு மூலப்பொருட்கள் மற்றும் மின்சாரம் செலவு இரண்டும் சேர்த்து 10000 தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 3000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

Automatic Method: 

pvc bend machine

இந்த Automatic Method பொறுத்தவரை நாம் எந்த ஒரு உடல் உழைப்பும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. PVC Bend தயார் செய்வதற்கு என்று இயந்திரம் உள்ளது. அதில் பைப்புகளை கட் செய்து உள்ளே வைத்தால் அதுவே பைப்பை வளைத்து, ஓரங்களை விரிவு செய்து கொடுத்துவிடும். இந்த இயந்திரம் விலை 4.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 400 PVC Bend உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாளுக்கு 4000 வரை உற்பத்தி செய்ய முடியும்.

இவற்றில் உற்பத்தி மாறுபடுகிறது என்பதால் வருமானம் ஒரு மதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil