வீட்டிலேயே ரஸ்னா பவுடர் தயார் செய்து ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்

Advertisement

Rasna Powder Making Business in Tamil

தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இப்போது உள்ள பெண்களும் சரி.. ஆண்களும் சரி.. மற்றவர்களுக்கு கீழ் பணிபுரிவதை விட சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. அவர்களுக்கு உதவிடும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவில் பல வகையான தொழில் யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் ஆண், பெண் இருவரும் வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு புதுமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது ரஸ்னா பவுடர் தயாரிப்பு தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை தமிழ்நாட்டில் அதிகளவு இதுவரை தொடங்கவில்லை. ஆக இந்த தொழிலை தொடங்குவதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், இதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் என்னென்ன, எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இடம்:

ஆரம்பத்தில் ரஸ்னா பவுடர் தயாரிப்பினை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆரம்பிக்கலாம். அதன்பிறகு உங்கள் தொழில் நன்கு வளர்ச்சியடைந்த பிறகு நீங்கள் தனியாக இடம் அமைத்துக்கொள்ளலாம்.

மூலப்பொருட்கள்:

இந்த ரஸ்னா தயாரிப்பிற்கு மிக முக்கியமான மூலப்பொருட்கள் எதுவென்றால் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், புட் கலர், ஒவ்வொரு சுவைக்கு ஏற்றது போல் எசன்ஷியல் ஆயில் வாங்க வேண்டும். இது தவிர தயார் செய்த பவுடரை பேக்கிங் செய்ய பேக்கிங் கவர் தேவைப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் வீட்டில் இருந்தே தினமும் 9,600 ரூபாய் சம்பாதிக்க அருமையான தொழில்..!

முதலீடு:

மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை வாங்குவதற்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை முதலீடு செய்தால் போதும்.

தயாரிக்கும் முறை:

சர்க்கரை 500 கிராம் என்றால், சிட்ரிக் ஆசிட் 20 கிராம், புட் கலர் 2 கிராம், எசன்ஷியல் பவுடர் அல்லது ஆயில் 10 ML இந்த அளவில் தான் ரஸ்னா பவுடர் தயார் செய்ய வேண்டும். இந்த அளவில் எடுத்த மூலப்பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தால் ரஸ்னா பவுடர் தயார். ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று தயார் செய்ய வேண்டும் என்றால் அளவுகளை அதற்கு ஏற்றது போல் அதிகரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தயார் செய்த ரஸ்னா பவுடரை பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த இந்த ரஸ்னா பவுடரை மளிகை கடை, டிபார்மண்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், ஜூஸ் கடை, ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் இது போன்ற இடங்களில் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு நாளுக்கு நீங்கள் இரண்டு கிலோ ரஸ்னா பவுடரை விற்பனை செய்தீர்கள் என்றாலே 3,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும். அதாவது 100 கிராம் ரஸ்னா பவுடர் கடைகளில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக ஒரு நாளுக்கு 2 கிலோ விற்பனை செய்துவிட்டால் 3,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முதலீடு இல்லாமல் பெண்கள் வீட்டில் இருந்து தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்க கூடிய 3 தொழில்..!

தேவைப்படும் சான்றிதழ்:

உணவு சார்ந்த எந்த தொழில் நாம் தொடங்கினாலும் அந்த தொழிலுக்கு  ஒரு FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் அப்ளை செய்து பெற முடியும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement