யாரும் செய்திடாத புதிய தொழில்..! Waste-ல் இருந்து பல கோடி சம்பாதிக்கலாம்..!

Plastic Tiles Manufacturing Process in Tamil

Plastic Tiles Manufacturing Process in Tamil

உங்களிடம் தொழில் தொடங்க பணம் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். ஆக நீங்கள் புதிதாக மற்றும் வித்தியாசமாக அதுவும் யாரும் அதிகளவு செய்திடாத தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றால் நிச்சயம் உங்களுக்கு இந்த பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் Waste-ஆக குப்பையில் எறியப்படும் பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்தி மறுசுழர்த்தி முறையில் அதனை Tiles-ஆக தயார் செய்து அதனை விற்பனை செய்வதன் மூலம் நாம் நல்ல வருமானம் பெற முடியும்.

இந்த தொழில் மூல பொருட்கள் மிக எளிமையாக கிடைத்துவிடும் என்றாலும் இந்த தொழில் முதலீடு என்பது அதிகமாகவே இருக்கும். ஆகவே பெரிய அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்க நினைக்கும் அனைவரும் இந்த Recycled Plastic Tiles Business மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ரீசைக்கிளேட் பிளாஸ்டிக் டைல்ஸ் பிசினஸ் பற்றிய சில தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Recycled Plastic Tiles Business பற்றிய சில தகவல்:

இந்தியாவில் பராஸ் என்பவர் இந்த Plastic Tiles Business-ஐ செயல்படுத்தியுள்ளார்.

இவர்களது நிறுவனத்தின் பெயர் Shayna Ecounified India Pvt Ltd ஆகும்.

நமது தமிழ்நாட்டில் இன்னும் இந்த தொழில் யாரும் தொடங்கவில்லை. இருப்பிலும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் இந்த தொழில் செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

பராஸ் என்பவர் 340 டன் பிளாஸ்டிக்கை 11 லட்சம் நிறங்களில் டைல்ஸாக தயார் செய்துள்ளனராம்.

குறிப்பாக இப்படி தயார் செய்த டைல்ஸை குறைந்தபட்சம் 20 ரூபாய் முதல் அதிகபட்சம் 70 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனராம்.

பிளாஸ்டிக் டைல்ஸ்:

பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. நாம் பயன்படுத்தும் ஒரு பிளாஸ்டிக் மக்குவதற்கு கிட்டத்தட்ட 1000 வருடங்கள் தேவைப்படுகிறதாம். ஆகவே நாம் Plastic மறுசுழற்சி முறையில் Plastic Tiles-ஆக விற்பனை செய்வதன் மூலம் பிளாஸ்ட்டிக் நிலத்தடியிலோ, கடலிலோ, குளத்திலோ போடுவதை ஓரளவு இந்த தொழில் மூலம் தடுக்க முடியும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 பல மடங்கு லாபம் பெற முதலீடும் மூலதனமும் மட்டும் போதுமானது 

மூலப்பொருட்கள்:

இந்த தொழில் முக்கிய மூல பொருட்களாக கருதப்படுவது பிளாஸ்டிக் தான், வீணாக குப்பையில் எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் இந்த தொழில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் டைல்ஸை விதம் விதமாக தயார் செய்வதற்கு அதற்கென்று அச்சுக்கலை வாங்க வேண்டியதாக இருக்கும். இவை இரண்டு மட்டும் தான் முக்கியமான மூலப்பொருட்களாக கருத்தப்படுகிறது.

தயாரிக்கும் முறை:

இந்த டைல்ஸ் தயார் செய்வதற்கு கண்டிப்பாக இயந்திரங்களை தேவைப்படுகிறது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதனை, அதற்கென்று உள்ள இயந்திரத்தில் போட்டு உருக்க வேண்டும். பின் உருக்கிய பிளாஸ்டிக்கை. அச்சுகளில் ஊற்றி  டைல்ஸ் ஆக தயார் செய்ய வேண்டும்.

முதலீடு:

இது பெரிய அளவிலான தொழில் என்பதால் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் என்று அனைத்திற்குமே குறைந்தபட்சம் இந்த தொழில் ஆரம்பிப்பதற்கு 55 லட்சம் வரை தேவைப்படும்.

இதில் Working Capital-க்கு 14 முதல் 16 லட்சம் வரை தேவைப்படும்.

தேவைப்படும் இயந்திரங்களின் பெயர்கள்:

 1. Pillar Hydraulic Press
 2. Agglomerator Machine
 3. Grinder machine
 4. Rotary Sand Filter
 5. mixture machine with gear box
 6. Shredder Machine
 7. Air compressor
 8. Water chiller with pump
 9. Spray Machine
 10. Plastic Extruder
 11. Flatbed Printer machine and other equipment’s

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022