வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்? | Self Business Ideas in Tamil

self business ideas in tamil

வீட்டிலிருந்தபடியே சிறு தொழில் செய்வது எப்படி? | Suya Thozhil List in Tamil

இன்றைய சூழலில் மக்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் தேவைகள் பூர்த்தி அடைவது சற்று கடினமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் நாம் இந்த பதிவில் வீட்டிலிருந்தபடியே அனைவரும் லட்சத்தில் சம்பாதிக்க கூடிய சிறு தொழில் பட்டியலை படித்தறியலாம் வாங்க.

Pre Pleating Business:

suya thozhil list

 • இப்பொழுது உள்ள பல பெண்களுக்கு புடவை கட்டுவது சற்று கடினமாக உள்ளது என்று தான் கூற வேண்டும். அதனால் பல பெண்கள் தங்களுடைய புடவையை Pre Pleating செய்து கொள்ள விரும்புகிறார்கள்.
 • Pre Pleating என்பது தங்களுடைய புடவையை கட்டுவதற்கு ஏதுவாக முன்னரே தயார்படுத்தி கொள்வது.
 • Pre Pleating கோர்ஸ் கற்று கொண்டு நீங்கள் இந்த தொழிலை செய்ய ஆரம்பித்தால் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த பயிற்சியை நீங்கள் ஒரே வாரத்தில் கற்று கொள்ள முடியும். இந்த தொழிலுக்கு உங்களுக்கு பெரிய முதலீடு, அதிக இடவசதி தேவையில்லை.

Homemade Organic Products:

suya thozhil list in tamil

 • Self Business Ideas in Tamil: மாறிவரும் உணவு பழக்கம் நமது உடல்நலத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது.
 • நம்முடைய உடலை பராமரித்து வருவதற்காக பலரும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அரிசிகளை உபயோகபடுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
 • நீங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடிய அரிசி, தினை, கம்பு, கேழ்வரகு போன்ற பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி மளிகை கடை, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான Flipkart, amazon போன்றவற்றில் விற்பனை செய்து லாபத்தை பெறலாம்.

preloved children’s books:

self business ideas in tamil

 • வீட்டிலிருந்தபடியே சிறு தொழில் செய்வது எப்படி? குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பள்ளியில் சேர்பதற்கு முன்பாகவே பல பயனுள்ள விஷயங்களை கற்று கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விரும்பும் புத்தகத்தை வாங்கி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
 • இந்த தொழிலை செய்வதற்கு குறைந்த அளவு முதலீடு தேவைப்படும். புத்தகங்களை மொத்த விலைக்கு வாங்கி ஆன்லைன் மூலம் விற்பனை செய்து நல்ல லாபத்தை பெற முடியும்.

Wooden Toys Sale:

வீட்டிலிருந்தபடியே சிறு தொழில் செய்வது எப்படி

 • Suya Thozhil Tips: குழந்தைகளின் மத்தியில் எப்போதும் Trending-ஆக இருப்பது பொம்மைகள். இப்பொழுது குழந்தைகளுக்கு மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் மீது அதிக ஆர்வம் உள்ளது.
 • இது போன்ற பொம்மைகள் இப்பொழுது இணையதளத்தில் அதிகம் விற்பனை செய்யபடுகிறது.  எனவே நீங்கள் இந்த தொழிலை செய்தால் வருமானம் அதிகமாக கிடைக்கும், மேலும் இந்த தொழிலில் நஷ்டம் ஏற்படாது.

Homemade Biscuits:

வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்

 • Suya Thozhil List in Tamil: பலவிதமான பிஸ்கட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், வீட்டில் செய்யகூடிய பிஸ்கட்களுக்கு தனி வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
 • வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த பிஸ்கட் தயாரிப்பு தொழிலை துவங்கலாம்.
 • இந்த தொழிலுக்கு உங்களுக்கு பிஸ்கட் தயாரிக்க தேவையான மாவு, சர்க்கரை, கிரைண்டர், மிக்சி, பிஸ்கட் தயாரிக்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்டவ் போன்றவை தேவைப்படும்.
 • சந்தையில் எப்போதும் லாபத்தை தரக்கூடிய பொருள் என்பதால் இதில் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும்.

தேங்காய் எண்ணெய் தயாரிப்பு:

veetil irunthu suya thozhil

 • suya thozhil list: எல்லோருக்கும் தங்களின் கூந்தலை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெரும்பாலனோர் இயற்கை முறையில் தயாரிக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார்கள்.
 • சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இயற்கையான முறையில் எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும்.
 • இந்த தொழிலை செய்வதற்கு குறைந்த முதலீடு போதுமானது. இதற்கான மூலப்பொருள் உலர்ந்த தேங்காய்.
 • இதை நீங்கள் தேங்காய் வியாபாரிகளிடமிருந்து அல்லது விவசாயிகளிடமிருந்து வாங்கி செக்கில் ஆட்டி விற்பனை செய்யலாம். இந்த தொழிலுக்கு வருடம் முழுவதும் டிமான்ட் இருக்கும்.
பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய அருமையான சுயதொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல்