1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 3000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

profitable home business ideas in tamil

Siru Tholil Business in Tamil | முளைக்கட்டிய பயிர் தொழில் செய்வது எப்படி..?

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் 1,000 ரூபாய் முதலீட்டில் தினமும் 3,000 ரூபாய் வரைக்கும் வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் முளைக்கட்டிய சிறுதானிய வகைகளை தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் தான். நம்மில் பலருக்கும் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் என்ன தொழில் செய்வது என்ற சரியான புரிதல் இருக்காது. அப்படிபட்டவர்களுக்காகத்தான் இந்த பதிவு அதனால் இந்த பதிவை விரிவாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

முளைக்கட்டிய பயிர் தொழில்:

business ideas in tamil

பொதுவாக சிறுதானிய வகைகளில் மிகுந்த சத்துக்கள் உள்ளது. அதைவிடவும் அதனை முளைக்கட்டி  செய்து சாப்பிடுவதில் இன்னும் அதிகமான சத்துக்கள் உள்ளது. அதனால் இந்த முளைகட்டிய சிறுதானிய வகைகளை நீங்கள் தயார் செய்து விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

முளைக்கட்டிய பயிர் தொழிலுக்கான மூலப்பொருட்கள்:

முளைக்கட்டிய பயிர் தொழில் செய்வதற்கு மூலப்பொருள் என்று பார்த்தால் நல்ல நிலையில் சிறுதானிய வகைகள் மட்டும்தான். இந்த தொழில் செய்வதற்கென்று தனியாக இடம் தேவையில்லை உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும்.

தயாரிப்பு முறை:

best home business ideas in tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சிறுதானிய வகைகளை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து பிறகு மறுநாள் காலையில் அதில் உள்ள தண்ணீரை நன்கு வடிகட்டி அதனை ஒரு துணியில் போட்டு நன்கு இறுக்கி கட்டிக் கொள்ளவும்.

அப்படி இல்லையென்றால் காற்றுப்புகாத மூடிபோட்ட பாத்திரத்தில் வைத்து 24 மணிநேரம் கழித்து அதனை எடுத்து பார்த்தால் அது நன்கு முளைவிட்டிருக்கும். பின்னர் அதனை எடுத்து சிறிது நேரம் வெயிலில் உலரவைத்து கொள்ளுங்கள். உலரவைத்த சிறுதானியங்களை 50 கிராம் முதல் 1 கிலோ வரைக்கும் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

பேக்கிங் செய்து வைத்துள்ள இந்த சிறுதானிய வகைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் அல்லது உங்கள் ஊரில் உள்ள சூப்பர் மார்க்கெட் அல்லது காய்கறி கடைகளுக்கு தோராயமாக 1 கிலோ 150 – 200 ரூபாய்க்கு விற்கலாம்.

அப்படி விற்கும்பொழுது தோராயமாக ஒரு நாளைக்கு நீங்கள் 20 கிலோ விற்பனை செய்தால்  3,000 – 3,500 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள் => குறைந்த முதலீட்டில் தினமும் ரூபாய் 2,000 வரைக்கும் சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil