Small Business Ideas 2023 in Tamil
தொழில் தொடங்க அனைவருக்கும் ஆசையாக இருக்கும் அதேபோல் மனிதர்கள் அனைவருமே முதலில் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. முதலில் ஒரு தொழில் ஆரம்பித்தால் அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
அதைவிட முக்கியமாக எந்த தொழில் செய்தாலும் அதில் எடுத்த உடனே லாபம் பார்க்க முடியாது. வேகமாக முன்னேற நிறைய தொழில்கள் உள்ளது. இருந்தாலும் அதிக ரிஸ்க் இல்லாமல் இருக்கும் தொழில்கள் பற்றி இந்த பதிவு வாயிலாக பார்ப்போம்..!
Small Business Ideas 2023 in Tamil:
அதிகளவு நாம் இயற்கை முறையை இப்போது பின் பற்றி வருகிறோம். காரணம் அதில் தான் பக்க விளைவுகள் இருக்காது. ஆனால் இயற்கை பொருட்கள் அதிகளவு கிடைப்பதில்லை.
முன்பு இருந்த காலத்தில் இயற்கை பொருட்கள் அனைத்துமே செடியாகவும் கொடியாகவும் கிடைக்கும் ஆனால் இப்போது அப்படி இல்லை அதனை காசு கொடுத்து வாங்கி வருகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இப்போது அதற்கு அதிகமாக தேவை இருக்கிறது. ஆகவே அதனை ஒரு கடையாக ஆரம்பிக்கலாம்.
அந்த கடையில் நிறைய வகையாக இயற்கை மூலிகை, மூலிகை பொடிகள் அனைத்துமே விற்கலாம்.
- ஜாதிக்காய் பொடி
- ஓரிதழ் தாமரை பொடி
- ஆவாரம் பூ பொடி
- கண்டங்கத்திரி பொடி
- ரோஜாபூ பொடி
- அருகம்புல் பொடி
- நெல்லிக்காய் பொடி
- கடுக்காய் பொடி
- வில்வம் பொடி
- அமுக்கரா பொடி
- சிறுகுறிஞ்சான் பொடி
- நாவல் பொடி
- வல்லாரை பொடி
- தூதுவளை பொடி
- துளசி பொடி
- கற்றாழை ஜெல் அல்லது பொடி
- ரோஜா பூ பொடி
- முடக்கத்தான்
- கரிசலாங்கண்ணி
- கருஞ்சீரகம்
- ஆரஸ்பதி
- முசுமுசுக்கை
- ஓமவள்ளி
- அருகம்புல்
- நொச்சி
- ஆடாதொடை
- நிலவேம்பு
- பொன்னாங்கண்ணி
- அத்தி
- அதிமதுரம்
- ஆமணக்கு
- நிலாவாரை
- பிரண்டை
இதேபோல் நிறைய சமையலுக்கு தேவையான பொடிகளையும் விற்கலாம்.
எந்த காலத்திலும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!
முதலீடு:
அதிகபட்சமாக – 25,000
லாபம் – 10,000
இந்த கடையை திறந்த உடனே லாபம் பெற முடியாது, காரணம் இது மாதிரி கடைகள் அதிகமாக எங்கும் இருப்பதில்லை. ஏன் இந்த கடை லாபம் என்றால் தலை முடி பிரச்சனைக்கு கூட இந்து மாதிரியான மூலிகை மருந்துகளை தேடி கிராமங்களுக்கு செல்கிறார்கள். அங்கிருந்து நீங்கள் வாங்கி விற்பனை செய்கிறீர்கள் என்றால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
இந்த மூலிகை பொருட்களை பெரிய பெரிய மளிகை கடைகளுக்கு கூட விற்பனை செய்யலாம். அதேபோல் அதிகமாக எந்த பொருட்கள் விற்பனை ஆகிறது என்று தெரிந்துகொண்டு தெருக்களில் இருக்கும் கடைகளுக்கும் கூட சில பொருட்களை மட்டும் விற்பனை செய்ய முடியும்.
இதனால் வருங்காலத்தில் இந்த தொழில் செய்ய அனைவரும் முன் வருவார்கள். ஆகவே அதற்குள் இந்த தொழிலையே தொடங்கி புதியான வணிகத்தையும் பாதுகாப்பான சுற்றுசூழ்நிலையும் உருவாக்கலாம்.
இதையும் தொடங்கலாம் 👉👉 முதலீடு குறைவாக இருந்தால் போதும் மாதம் மாதம் நல்ல லாபம் கிடைக்கும்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |