தினமும் 4000 வருமானம் வேண்டுமா? அப்போ இந்த தொழிலை செய்து பாருங்கள்.

small business in tamil

தினசரி வருமானம் தரும் தொழில் | Daily Income Business in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் தினமும் 4000 வரை வருமானம் வரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இந்த வியாபாரத்தை யார்வேண்டுமானாலும் செய்யலாம், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்துவரலாம். வேலைக்கு செல்லும் நபர்கள் இதை பார்ட்டைம் பிஸ்னஸ் ஆகா கூட செய்யலாம்.  இந்த வியாபாரத்தை செய்வதற்கு சின்னதாக இடம் இருந்தாலே போதும். மேலும் இவற்றின் முழு விவரகளையும்  நம் பதிவின் மூலம் அறியலாம் வாங்க.

வீட்டிலிருந்தே தினமும் வருமானம் பெரும் அருமையான தொழில்.

Pasta Making Business in Tamil:

இன்னக்கி நம்ம பாக்க கூடிய தொழில் என்னவென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பாஸ்தா தயாரிப்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.  இந்த உணவு பொருளை பொறுத்தவரை மிகவும் சுவையாக இருக்கும்.  இந்த உணவு பொருள் அதிக அளவில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இதை மிகவும் சுலபமாக செய்து, எப்படி விற்பனை செய்யலாம் என்று பார்க்கலாம்.

பாஸ்தா தயாரிப்பு முறை:

பாஸ்தா உணவு பொருட்களை பொறுத்தவரை விதவிதமான வடிவங்களில் இருக்கிறது. அதவது Maccheroni Pasta, Farfalle Pasta, Cannelloni Pasta, Creste di Galli, Cavatappi, Rigatoni, Conchiglie, Anelli, Penne, Spaghetti, Fusilli, Gnocchi போன்ற இதனை வகை பாஸ்தா உள்ளன.

இந்த பாஸ்தாவை தயாரிப்பதற்கு மைதா, கோதுமை, முட்டை, உப்பு, பேக்கிங் கவர், லேமினேட்டி மிஷின் இவை இருந்தால் இந்த உணவு பொருளை தயாரித்திடலாம்.

Pasta Making Machine in Tamil:

இந்த பாஸ்தா உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பாஸ்தா மிஷின்  இருந்தால் போதும் இந்த மிஷினில் இரண்டு வகைகள் உள்ளது அதாவது Manual Machine, Automatic Machine  இருக்கிறது. இதில்  Manual Machine விலை 1500 வரை உள்ளது.  அடுத்ததாக இதற்கு ஆட்டோமேட்டிக் பாஸ்தா இயந்திரமும் உள்ளது அதன் விலை ஆனது 1,40,000 வரை உள்ளது. இந்த மிஷினை நீங்க ஆன்லைன் மூலமாக கூட பெற்றுக்கொள்ளலாம்.

பேக்கிங் செய்யும் முறை:

இந்த உணவு பொருட்களை தயாரித்த பிறகு பேக்கிங் செய்யும் பொழுது, நம் பேக்கிங் செய்யும் கவர்க்கு சீலிங் மிஷின் கொண்டு அருமையாக செய்வதற்கு சீலிங் மிஷினை ஆன்லைன் மூலமாக வாங்கி கொண்டு சீலிங் கவர் கொண்டு தயாரிக்க வேண்டும்.

விற்பனை விலை மற்றும் தேவைப்படும் முதலீடு:

இந்த வியாபாரத்தை தொடங்குவதற்கு குறைத்து 10,000 ரூபாய் மட்டும் இருத்தலே போதும் தினமும் 4000 வரைக்கும் வருமானம் பெற முடியும்.

அடுத்ததாக இந்த உணவு பொருளை பேக்கிங் செய்யும் பொழுது 8kg  பாஸ்தாவின் விலை 250 லிருந்து 300 ரூபாய் வரைக்கும் இந்த பொருளை விற்பனை செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 8kg  பாஸ்தாவை 20 பேக்கிங் செய்து விற்றாலே தினமும் 4000 வரை வருமானம் கிடைக்கிறது.

இந்த உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்யலாம், அதோடு அருகில் இருக்கும் மாளிகை கடை, மார்க்கெட், டீபன்ட்மென்ட் ஸ்டோர், ஹோட்டல் போன்ற பல இடங்களுக்கு இந்த உணவு பொருட்களை செய்து வரலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022