பெண்களுக்கான அருமையான தொழில் தினமும் 2000 ரூபாய்க்கு மேல் வருமானம்

Advertisement

சிறுதொழில் வியாபாரம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் ஒரு சிறந்த பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இந்த பிஸ்னஸை யார்வேண்டுமானாலும் எடுத்து நடத்தலாம். ஆனால்  குறிப்பாக பெண்களுக்கு இந்த பிஸ்னஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பிஸ்னஸ் ஆனது பெண்களுக்கு அதிகமாக தேவைப்படும் ஒரு அழகு பொருள் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த பிஸ்னஸ் செய்வதற்கு என்னென்ன தேவைப்படும், எவ்வளவு முதலீடுகள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

அதிகமான டிமாண்ட் உள்ள தொழில், இந்த தொழிலை செய்தால் மாதம் 90,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

Aloe Vera  Making Business in Tamil:

இன்னக்கி நம்ப பார்க்க இருக்கும் பிஸ்னஸ் என்னவென்றால் சோற்றுக்கற்றாழை ஜெல் தயாரிப்பது பற்றி தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பிஸ்னஸை கிராம புறத்தில் இருப்பவர்கள் மற்றும் நகர் புறங்களில் இருப்பவர்கள் தொடங்கி வரலாம். இந்த கற்றாழையை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகமாக வருமானம்  கிடைக்கும்.

இந்த கற்றாழையானது  பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தின் அழகை மேம்படுத்துவதற்கும், அதிகமான வளவளப்பான முடி வளர்ச்சியை பெறுவதற்கும்  இந்த கற்றாழையானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டும் இன்றி பல மருத்துவ குணங்களுக்கும்  இதனுடைய தேவைகள் அதிக அளவில் இருப்பதால் அதிகமாக விற்பனை செய்யப்டுக்கிறது.

கற்றாழை பிஸ்னஸ் தொடங்குவதற்கு தேவைப்படும் இடம்:

இந்த சோற்றுக்கற்றாழை தயாரிப்பதற்கு உங்களுடைய வீட்டில் சிறியதாக இடம் இருத்தலே போதும், அதாவது 10 × 10 இடம் இருந்தால் போதும் இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு, அதன் பிறகு அதிகமான லாபம் கிடைக்கும் பொழுது தனியாக ஒரு இடம் பிடித்துக்கொண்டு பணியாட்கள் சேர்த்து இன்னும் அதிகமான முதலீட்டை செய்து தொழில்  தொடங்கலாம்.

சோற்று கற்றாழையை விற்பனை செய்வது மட்டுமல்லாமல் கற்றாழை ஜெல், கற்றாழை எண்ணெய், ஷாம்பு  போன்ற பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்யலாம்.

சோற்று கற்றாழை  தயாரிப்பது எப்படி?

முதலில் உங்கள் வீட்டில் சிறியதாக இடம் இருந்தால் இந்த கற்றாழையை வாங்கி வளர்க்கலாம்,  இதனுடைய வளர்ச்சி மூன்று மாதங்களில் பெரிதாகிவிடும், அல்லது இதனை பராமரிப்பதற்கு சிரமமாக இருந்தால் கிராம புறங்களில் மிகவும் கம்மியான விலையில் வாங்கிக்கொள்ளலாம், இந்த சோற்று கற்றாழையானது கிராம புறங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. எனவே இந்த சோற்றுக்கற்றாழையை வாங்கி   விற்பனை செய்யலாம்.

விற்பனை மற்றும் முதலீடு:

இந்த கற்றாழை  ஆனாது கடைகளில் 1 கிலோ கற்றாழை 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நீங்கள் வளருக்கும் கற்றாழையை விற்பனை செய்யும் பொழுது 250 கிராமுக்கு 25 ருபாய் வைத்து விற்பனை செய்யலாம். இதேபோல் 250 கிராம் கற்றாழையை 100 பீஸ் விற்பனை செய்யும் பொழுது 2500 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்.

கற்றாழையை விற்பனை செய்யும் முறை:

இந்த கற்றாழையை நீங்கள் காய்கறி கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், போன்ற கடைகளில் விற்பனை செய்து வரலாம், அதோடு ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்யலாம். உங்களுக்கு அதிகமான கஸ்டமர்ஸ் கிடைக்கவேண்டும் என்றால் சோசியல் மீடியாக்கள் மூலம் தெரியப்படுத்தி விற்பனை செய்து வரலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement