Soup Business Ideas in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய வியாபாரம் பதிவில் சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையுள்ள அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தொழிலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் சூப் கடை வைப்பது தான். சூப் கடையா அதனை நாம் எவ்வாறு வைப்பது என்று தானே சிந்திக்கிறீர்கள். அப்படி சிந்திப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு. அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சூப் கடை தொழிலை எவ்வாறு தொடங்க வேண்டும் என்று முழுதாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த சூப் கடை தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் நீங்களும் இந்த சூப் கடையை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Start a Soup Business in Tamil :
இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது அதிகரித்துவிட்டது. அதனால் நமக்கான வேலைவாய்ப்பை நாமே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு சுயதொழில் ஆரம்பிப்பவர்களுக்கு ஒரு சிறந்த சுயதொழிலாக இருப்பது தான் இந்த சூப் கடை தொழில். அதனால் நீங்களும் இந்த சூப் கடை தொழிலை ஆரம்பித்து அதிகம் சம்பாதிக்கலாம்.
மூலப்பொருட்கள்:
இந்த சூப் கடை ஆரம்பிக்க மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சூப் செய்வதற்கான காய்கறிகள், அசைவ உணவு பொருட்கள், மசாலா வகைகள், சூப் செய்வதற்கான பாத்திரங்கள், அடுப்பு மற்றும் சூப்பை பரிமாறுவதற்கான பாத்திரங்கள் ஆகியவை தான் முக்கிய மூலப்பொருட்கள் ஆகும்.
இவைகளை தவிர சூப் சாப்பிட வருகின்றவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு தேவைப்படும் டேபிள் மற்றும் நாற்காலி ஆகியவைகளும் மூலப்பொருட்களில் அடங்கும்.
இந்த சூப் கடை தொழிலை நீங்கள் சிறியதாய் தள்ளு வண்டியிலும் போடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு இடத்தில் நிரந்தரமான கடையாகவும் போடலாம்.
முதலீடு மற்றும் விற்பனை செய்யும்முறை:
இந்த சூப் கடை தொழில் ஆரம்பிப்பதற்கு முதலீடு என்று பார்த்தால் 25,000 ரூபாய் – 50,000 ரூபாய் வரைக்கும் ஆகலாம். ஆனால் லாபம் என்று பார்த்தால் நீங்கள் கடை போடும் இடத்தை பொறுத்து மாதத்திற்கு 50,000 – 1,00,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்.
உதாரணமாக நீங்கள் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான கோவில், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நீங்கள் கடை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல வியாபாரம் செய்யலாம். மேலும் நல்ல லாபமும் பெற முடியும்.
3 மணிநேரம் வேலை செய்தால் போதும் 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |