தினசரி வருமானம் தரும் தொழில் | Stitching Business at Home in Tamil
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதனாலேயே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்கும் போது அதற்கான ஊதியம் கிடைப்பதில்லை. மரியாதையும் கிடைப்பதில்லை.
மேலும் நேரம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்கினால் நேரம், விதிமுறைகள் எல்லாம் இருக்காது. நம் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் ஒரு தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Tailoring Business Ideas in Tamil:
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இல்லை ஒத்துக்கொள்” என்ற பழமொழி ஓன்று உள்ளது. நமக்கு ஏதாவது ஒரு கை தொழில் தெரிந்தாலே போதுமானது. எந்த ஊருக்கு சென்றாலும் கை தொழிலை வைத்து வாழ்வில் முன்னேறிவிடலாம். அதில் ஒரு தொழில் தான் தையல் தொழில்.
இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலே சிறிய இடம் அதாவது மிஷின் வைக்கின்ற அளவிற்கு இடம் இருந்தாலே போதுமானது.
அடுத்து உங்களுக்கு துணி தைக்க தெரிந்திருக்க வேண்டும். துணிகளில் சுடிதார், ஆண்கள் போடும் பேண்ட், சட்டை, சிறிய குழந்தைகளுக்கு பாவாடை சட்டை போன்றவை தைக்க தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிழிந்த துணிகளை அடிப்பது, Blouse தைக்க தெரிந்தால் மட்டுமே போதும்.
இதையும் படியுங்கள் ⇒ வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு Demand எப்போதுமே இருக்கும்..!
மூலப்பொருட்கள்:
இந்த தொழில் செய்வதற்கு ஒரு தையல் மிஷின், ஊசி, நூல், கத்தரிக்கோல் மட்டும் தேவையான பொருட்கள் ஆகும். இவை எல்லாம் வாங்குவதற்கு ஒரு 6,000 ரூபாய் வரும்.
வருமானம்:
ஒரு Blouse தைப்பதற்கு 200 ரூபாய் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு 5 Blouse தைக்கிறீர்கள் என்றால் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம். ஒரு மாதத்திற்கு 150 Blouse தைத்து கொடுத்தால் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
இதுவே ஒரு திருமண பெண்ணுக்கு தைத்து கொடுத்தால் அதிகமாக வாங்கி கொள்ளலாம். நல்ல Grand-ஆக தைத்து கொடுப்போம். அப்படி தைத்துக் கொடுக்கும் போது ஒரு Blouse -க்கு 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த தொழிலை பார்ட் டைமாக செய்தாலே மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்றால், நாளடைவில் முழுவதுமாக பார்த்தால் மாதத்திற்கு 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
சாதாரண நாட்களை விட தீபாவளி, பொங்கல், ரம்ஜான் இன்னும் பல விசேஷ நாட்களில் நல்ல வருமானத்தை சம்பாதிக்கலாம். நீங்கள் தையல் தொழிலை செய்தால் எந்த காலத்திலும் நஷ்டமே ஆகாது.
தையல் தொழில் பயிற்சி:
உங்களால் தையல் தைக்க முடியாது என்றால் தையல் தொழிலை பயிற்சி கொடுக்கலாம். தையல் தொழிலை கற்று கொள்வதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர். அதனால் இந்த தொழிலை செய்து வாழ்வில் முன்னேறுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ இந்த தொழில் செய்ய பொருள் வாங்க வேண்டாம், விற்க வேண்டாம் வீட்டில் இருந்தபடியே மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |