தினமும் காலை 11 to 12 மணி மட்டும் வேலை செய்தால் போதும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Summer Business Ideas 

இப்போது வெயில் காலம் வந்துவிட்டது. அதனால் இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் வெளியில் கூட வர முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த வெயில் காலத்திற்கு ஏற்றவாறு என்ன தொழில் செய்வது எப்படி வருமானம் பெறுவது என்ற குழப்பம் அனைவரிடத்திலும் இருக்கும். ஆனால் இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற மாதிரியான தொழில்கள் நிறைய உள்ளது. அதில் ஏதாவது ஒன்றை செய்தால் போதும் கை நிறைய சம்பாதிக்கலாம். நீங்கள் யோசிக்கலாம் வெயில் காலத்தில் வெளியில் கூட செல்ல யாரும் யோசிப்பார்கள் இதில் எப்படி கை நிறைய சம்பாதிக்க முடியும் என்று. அது எப்படி என்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அத்தகைய சூட்டினை குறைக்க உதவும் பொருட்களை தான் மக்கள் அனைவரும் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆகையால் இன்றைய பதிவில் அப்படிப்பட்ட ஒரு தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலுக்கான முதலீடும் அதிகாமாக தேவைப்படாது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கோடையில் என்ன தொழில் செய்வது:

புதிதாக என்ன தொழில் செய்யலாம்

இப்போதே Summer சீசன் ஆரம்பம் ஆகிவிட்ட காரணத்தினால் இதன் பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இத்தகைய சூட்டினை குறைக்கும் பொருட்களை தான் மக்கள் அதிகமாக வாங்கி சாப்பிடுவார்கள்.

அது என்ன பொருட்கள் என்றால் இளநீர், பழ ஜூஸ், மோர் மற்றும் நுங்கு  போன்றவற்றை தான் மக்கள் அதிமாக கோடை காலத்தில் விரும்புகின்றனர். ஆகையால் இன்று Nungu Business-ஐ எப்படி செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

தொழில் தொடங்க மூலப்பொருள்:

  • பனை நுங்கு
  • தள்ளுவண்டி
  • பேக்கிங் கவர் அல்லது நியூஸ் பேப்பர்

இந்த தொழிலை செய்வதற்கு உங்களுக்கு ஒரு தள்ளு வண்டி தேவைப்படும். ஏனென்றால் அந்த தள்ளு வண்டியினை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடமாக பார்த்து மாற்றி மாற்றி வைத்து கொள்ளலாம்.

தொழில் தொடங்க முதலீடு:

நீங்கள் செய்யப்போகும் இந்த கோடைக்கால தொழிலுக்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 2,500 ரூபாய் தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

கோடை காலத்தில் செய்யக்கூடிய இந்த தொழிலுக்கு இடம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆகையால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த இடம் நிழலாகவும் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை இப்போதே ஆரம்பித்தால் எதிர்காலத்தில் நீங்கள் தான் Boss.. என்றும் கைகொடுக்கும் நிரந்தரமான தொழில் 

தொழில் தொடங்குவது எப்படி..?

தொழில் தொடங்குவது எப்படி

முதலில் ஒரு நாளைக்கு தேவையான பனை நுங்கினை வாங்கி கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தொழிலை செய்வதற்கு ஒரு இடத்தினை பார்த்து அங்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இந்த தொழிலை செய்வதற்கு நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆகையால் நீங்கள் இந்த தொழிலை காலை 10:30 மணி முதல் 12 மணி வரை செய்தால் மட்டுமே போதும். ஏனென்றால் அப்போது தான் வெயில் அதிகமாக இருக்கும் அதனால் மக்கள் அனைவரும் வாங்கி செல்வார்கள்.

உங்களிடம் வந்து நுங்கு வேண்டும் என்றும் கேட்டு உடன் முழுவதுமாக இருக்கும் நுங்கினை வெட்டி மட்டும் கொடுத்தால் போதும்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலுக்கான முதலீடு 0% ஆனால் வருமானம் என்று பார்த்தால் மொத்தமாக 50% கிடைக்கும்.. 

வருமானம்:

ஒரு நுங்கின் பீஸின் விலை 5 ரூபாய் என்று தோராயமாக விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் என்றால் ஒன்று நாளைக்கு நீங்கள் தோராயமாக 2,000 முதல் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த தொழில் உங்களுக்கான நேரமும் வெறும் 1 மணி நேரம் தான்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement