இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் 10 பொருட்கள்..!

Top 10 Export Goods List in India

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் டாப் 10 பொருட்கள் | Top 10 Export Goods List in India

நண்பர்களுக்கு வணக்கம்.. ஒவ்வொரு ஆண்டும் நமது இந்தியாவில் அதிக அளவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2021-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா மொத்தம் 394.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் முதல் 10 பொருட்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். குறிப்பாக இந்த பதிவு ஏற்றுமதி தொழிலை செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவை தொடர்ந்து படிப்பும்.

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்..!

No: 1

இந்தியாவில் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஒன்று தான் எண்ணெய் உள்ளிட்ட கனிம எரிபொருட்கள் ஆகும். இந்த பொருட்கள் 56.4 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்ய படுகிறது. இந்த பொருட்கள் ஏற்றுமதியில் மொத்தம் 14.3% ஆகும்.

No: 2

இரண்டாவதாக பார்க்க இருப்பது ரத்தினங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆகும். இந்த பொருட்களும் ஏற்றுமதில் அதிக வரவேற்பு இருக்கிறது. 38.2 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்ய படுகிறது. இந்த பொருட்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பு 9.7% ஆகும்.

No: 3

மூன்றாவதாக பார்க்க இருப்பது கணினி மற்றும் அதனை சார்ந்த இயந்திரங்கள் 24.2 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, இந்த பொருட்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 6.1% ஆகும்.

No: 4

இரும்பு, எஃகு பொருட்களும் இந்தியாவில் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது . அதாவது 21.2 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 5.4% ஆகும்.

No: 5

ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் பொருட்கள் என்ன என்றால் கரிம ரசாயனங்கள் ஆகும். இந்த பொருட்கள் 21.2 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதியில் இந்த பொருட்களின் மதிப்பு 5.4% ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
ஏற்றுமதி என்றால் என்ன.? ஏற்றுமதி எப்படி செய்வது என்று தெரியுமா.?

No: 6

இந்திய ஏற்றுமதியில் 6-வது இடத்தை பிடித்திருப்பது மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகும். இந்த பொருட்கள் 9.5 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதியில் இந்த பொருட்களின் மதிப்பு 4.9% ஆகும்.

No: 7

ஏழாவது இடத்தை பிடித்திருப்பது வாகனங்கள் ஆகும். 18.9 பில்லியன்டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதி மதிப்பில் 4.8% ஆகும்.

No: 8

மின் இயந்திரங்கள், உபகரணங்கள் போன்ற பொருட்களும் இந்தியாவில் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது, 18.8 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

No: 9

ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பது தானியங்கள் ஆகும். இந்தியாவில் அதிகளவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தானியங்களும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 12.4 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதியில் 3.1%  இடம் பெற்றுள்ளது.

No: 10

பத்தாவதாக பார்க்க இருக்கும் பொருள் பருத்தி ஆகும். பருத்தியும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய படுகிறது. 10 பில்லியன் டாலருக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதியில் 2.5% இடம் பெற்றுள்ளது.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil