எந்த காலத்திலும் கைவிடாத தொழில்கள்..! நல்ல லாபத்தை பெற்று தரும்..!

Advertisement

Top 5 Manufacturing Business in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சூப்பரான Manufacturing பிசினஸ் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக நாம் இந்த தொழில் தொடங்குவோமா வேறு தொழில் தொடங்குவோமா என்று நிறைய கேள்விகளை பற்றி யோசித்துக்கொண்டு இருப்போம்..! அதில் சிலர் சில தொழில்களை செய்து நல்ல லாபத்தை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சிறந்த Manufacturing பிஸ்னஸ் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம்.

Top 7 Manufacturing Business in Tamil:

Coconut Hair Oil Manufacturing Business in Tamil:

coconut hair oil manufacturing business in tamil

இந்த தொழிலை இயற்கை முறையில் தயாரித்து அதனை நல்ல உற்பத்தி செய்து விற்பனையை செய்வதால் நல்ல லாபம் பெற முடியும். இப்போது செயற்கை முறையில் தயாரிக்கும் எண்ணெய்களை அதிகம் யாரும் வாங்குவது இல்லை, காரணம் அது உடலில் நிறைய மாற்றத்தையும் பின் விளைவுகளையும் அளிக்கிறது. ஆகையால் இதனை நீங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் – 250 முதல் 350 வரை விற்பனை ஆகிறது. ஆதலால் இதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். அதுபோல் இந்த தொழில் தொடங்க 1 சென்ட் இடம் இருந்தால் போதுமானது

Homemade Biscuits Business in Tamil:

Homemade Biscuits Business in Tamil

உங்களுக்கு பிஸ்கஸ்ட் செய்ய தெரியும் என்றால் மிகவும் நல்லது அப்படி உங்களுக்கு தெரியாது என்றால் தெரிந்தவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு இந்த தொழிலை தொடங்கலாம். என்னதான் வெளிநாடுகளிலிருந்து பிஸ்கேட்ஸ் வாங்கி சாப்பிட்டாலும் வீட்டில் செய்ய கூடிய பிஸ்கட்ஸ்க்கு அதிக எதிர்பார்ப்பு இருந்துகொண்டு இருக்கும்.

இதனை அதிகம் டீ கடைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. அதனால் இந்த தொழிலை வீட்டில் தொடங்கலாம். இதன் மூலம் மாதம் மாதம் 1 லட்சம் வரையில் பணம் சம்பாதிக்க முடிகிறது. இந்த தொழிலை செய்தால் பெரிய கடைகளுக்கு மால்களுக்கு உங்களுடைய பிஸ்கட்ஸ் பாக்கெட்டை விற்பனை செய்யலாம்.

Paper Manufacturing Business in Tamil:

paper manufacturing business in tamil

இந்த தொழிலுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டு இருக்கும் காரணம் அனைத்து இடங்களிலும் பேப்பர் பயன்படுத்துவது இயல்பு அதனால் இந்த தொழில்கள் எந்த காலத்திலும் தேவை இருந்துகொண்டே இருக்கும். இந்த தொழிலுக்கு நீங்கள் செய்யவேண்டியது பேப்பர் மெஷின் வைக்க ஒரு நல்ல இடம் இருந்தால் விட்டிலேயே கூட இந்த தொழிலை செய்யலாம். வீட்டில் செய்தால் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கும் அதேபோல் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கும் விற்பனை செய்யலாம்.

Soap and Washing Powder Business in Tamil:

Soap and Washing Powder Business in Tamil

இதனுடைய தேவையானது எவ்வளவு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த தொழிலை வீட்டில் செய்ய தொடங்கினால் நல்ல லாபம் பார்க்க முடியும் ஏனென்றால் உங்கள் ஊரிலும் பொருட்களை விற்கலாம், அதேபோல் பக்கத்தில் உள்ள ஊர்களிலும் இந்த தொழிலை செய்யலாம். இதன் மூலம் ஒரு கணக்கிட்டு சொல்ல முடியாத அளவிற்கு லாபம் கிடைக்கலாம்.

Meluguvarthi Business in Tamil:

முன்பு இந்த தொழிலானது அதிக அளவு விற்பனை ஆகுவதில்லை ஏனென்றால் அனைவரின் வீட்டிலும் இன்வெர்ட்டர் வந்துவிட்டது, அதனால் இதனை விரும்புவதில்லை. இருந்தாலும் இப்போது நிறைய விழாக்களில் மெழுகுவர்த்தி வாங்கி அலங்கரிக்கிறார்கள, அதனால் இப்போது இதற்கு நல்ல மவுஸ் உள்ளது. சிறிய வீட்டில் உள்ளவர்கள் மெழுகுவர்த்தி வாங்குகிறார்கள். இந்த தொழிலையும் துணிந்து செயலாம். இதன் மூலம் நல்ல லாபம் பார்க்க முடிகிறது.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல்
Advertisement