தினமும் 1000 கணக்கில் சம்பாதிக்க வேண்டுமா..? அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்..!

Advertisement

Tutti Frutti Making Business in Tamil

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமலும் கிடைத்த வேலை பிடிக்காமலும் பலர் தங்களின் வாழ்க்கையை மிகவும் கஷ்டப்பட்டு நடத்தி கொண்டு இருக்கின்றார்கள். அப்படி கஷ்டப்படுபவர்களுகெல்லாம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் ஒரு அருமையான மற்றும் எளிமையான ஒரு சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Tutti Frutti தயாரிக்கும் தொழில் பற்றிய முழு விவரங்களையும் தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Tutti Frutti தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்களின் வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Tutti Frutti Making Business Plan in Tamil:

Tutti Frutti Making Business Plan in Tamil

இந்த Tutti Frutti பல வகையான உணவு ………பொருட்களில் அழகுக்காக மேலே தூவப்படும். மேலும் ஒரு சில உணவு பொருட்களில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகின்றது.

அதனால் நீங்கள் இந்த Tutti Frutti தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

 Tutti Frutti Manufacturing Business in Tamil

இந்த Tutti Frutti தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள பப்பாளிக்காய், சர்க்கரை, ஃபுட் கலர், Dicing And Cubing Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Dicing And Cubing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மிகவும் எளிமையான தொழில் தான் ஆனால் லாபம் மட்டும் லட்ச கணக்கில் கிடைக்கும்

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Tutti Frutti-யை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

அதே போல் இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டில் நல்ல தூய்மையான 10 X 10 இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Tutti Frutti Manufacturing Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள பப்பாளிக்காய்களை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனின் தோல் மற்றும் விதைகளை நீக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை Dicing And Cubing Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு தேவையான அளவில் பப்பாளிக்காய்களை நறுக்கி தந்து விடும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து நாம் வாங்கி வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> வீட்டில் சின்ன இடம் இருந்தால் நீங்களும் Factory ஆரம்பிக்கலாம்

பிறகு அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பப்பாளிக்காய் துண்டுகளை சேர்த்து 24 மணி நேரம் அப்படியே ஊறவிடுங்கள். பின்னர் அதனை எடுத்து அதன் மீது நாம் வாங்கி வைத்துள்ள ஃபுட் கலர்களை சேர்த்து நன்கு கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

வருமான மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Tutti Frutti-களை மளிகை கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் பேக்கரிகள் போன்ற இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். 1 கிலோ Tutti Frutti-ன் விலை 200 ரூபாய் – 250 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 கிலோ Tutti Frutti-யை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4,000 ரூபாய் – 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு 1,20,000 ரூபாய் – 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த Tutti Frutti தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் கையில் காசு இல்லை என்றாலும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement