வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி? & அதன் பயன்கள்..! Udyog aadhar registration online..!

Updated On: June 21, 2024 4:12 PM
Follow Us:
Udyog aadhar registration online
---Advertisement---
Advertisement

தொழில் துவங்க உதயம் ஆதார் பதிவு செய்வது எப்படி? & அதன் பயன்கள்..! Udyam  Aadhar Registration Online..!

சிறு தொழில் தொடங்க லைசென்ஸ் வாங்குவது எப்படி?

வணக்கம் நண்பர்களே..! இன்று நாம் தொழில் துவங்குவதற்கு உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். முன்பெல்லாம் SSI, em1 em2 என்று இருந்தது. இப்பொழுது அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு உத்யோக ஆதார் என்று வைத்துள்ளன. சரி இந்த பதிவில் ஆன்லைன் மூலம் இலவசமாக உத்யோக ஆதார் பதிவு (udyog aadhar registration online in tamil) செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

உத்யோக ஆதார் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்:-

உத்யோக் ஆதார் (Udyam Aadhar) என்பது இந்திய அரசினால் வழங்கப்பட்ட 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும். இதனை இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர முனைவகத்திற்காக வழங்குகிறது. மேலும் இது வணிகத்திற்கான ஆதார் எனவும் அழைக்கப்படுகிறது.

சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ?

SSI பயன்கள் | உத்யோக ஆதார் பதிவு பயன்கள்

உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில்,

  1. உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும்.
  2. மானியம் பெறுவதர்க்கும்.
  3. குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.
  4. வரி சலுகை பெற உதவும்.
  5. மின்சார கட்டணத்தில் சலுகை பெற உதவும்.
  6. மத்திய, மாநில அரசுககளின் சலுகை மற்றும் முன்னுரிமை பெற உதவும்.

சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் உத்யோக ஆதார் பதிவு (Udyog Aadhar Registration Online in tamil) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் உத்யோக ஆதார் பதிவு செய்யும் முறை | சிறு தொழில் பதிவு செய்வது எப்படி | Udyam Aadhar Registration Online in Tamil:-

உத்யோக/ உதயம் ஆதார் பதிவு செய்வது எப்படி ? ஸ்டேப்: 1

பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமான udyogaadhaar.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி?

Udyam Aadhar Registration Online in Tamil

Step: 2

அதில் உங்கள் ஆதார் கார்ட் நம்பர் மற்றும் உங்கள் பெயர் டைப் செய்து validate & generate OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் மொபைல்க்கு ஒரு OTP எண் வரும். அந்த OTP எண்ணினை டைப் செய்து Validate என்பதை கிளிக் செய்யுங்கள்.

பொது சேவை மையம் தொடங்குவது எப்படி

உத்யோக ஆதார் பதிவு செய்வது எப்படி ? udyog aadhar registration online in tamil step: 3

பிறகு Application Form Open ஆகும்.

அதில் பின் வரும் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த விவரங்களை நிரப்பினால் தங்களின் சான்றிதழ் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வரும்.

அதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கியின் `ஐஎஃப்எஸ்சி கோடு’ மற்றும் மின்னஞ்சல் முகவரி முக்கியம்.

இந்த உத்யோக ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் இல்லை (Udyog Aadhar Free Registration).

இதில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால் திருத்தங்கள் செய்ய முடியாது என்பதால், தேவையான விவரங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு நிதானத்துடன் பதிவு செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின், அதற்கான சான்றை (அக்னாலெட்ஜ்மென்ட்) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

அதில் யாருடைய கையெழுத்தும், ஒப்புதலும் தேவையில்லை.

தொழில்முனைவோரின் முதலீட்டு தொகைக்கு ஏற்றபடி குறு, சிறு, நடுத்தர தொழிலா என்பதை அக்னாலெட்ஜ்மென்டில் தெரிந்து கொள்ளலாம். இதில் இரண்டு வகையான பதிவுகள் உண்டு. அவை… உற்பத்தித் தொழில் பதிவு, சேவை தொழில் பதிவு.

சுயதொழில் துவங்க உதவும் மாவட்ட தொழில் மையம்..!

உற்பத்தி தொழில் பதிவுக்கு…

1. குறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (Micro): தொழில் உபகரணங்களுக்கு 25 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்.

2. சிறு தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (Small): தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்

3. நடுத்தர தொழில் உற்பத்தி தொழில்முனைவோர் (Medium): தொழில் உபகரணங்களுக்கு 10 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்

சேவை தொழில் பதிவுக்கு…

1. குறு தொழில் சேவை தொழில்முனைவோர் (Micro): தொழில் உபகரணங்களுக்கு 10 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
2. சிறு தொழில் சேவை தொழில்முனைவோர் (Small): தொழில் உபகரணங்களுக்கு 2 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்
3. நடுத்தர தொழில் சேவை தொழில்முனைவோர் (Medium): தொழில் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்வரை முதலீடு செய்பவர்கள்

தொழில் பதிவின் பலன்கள் | உத்யோக ஆதார் பயன்கள்!

UAM-ல் உத்யோக ஆதார் பதிவு செய்து அதற்கான சான்றைப் பெற்றவர்கள், கீழ்க்காணும் பலன்களைப் பெற முடியும். இது ஒரு நிரந்தர பதிவு ஆகும்.

  1. தொழில்முனைவோர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் தொழிற்பயிற்சி மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளலாம்.
  2. தொழிலை விரிவுபடுத்த வங்கிக்கடன் பெறும் போதும் இதைச் சமர்ப்பிப்பது கூடுதல் பலமாக இருக்கும்.
  3. உற்பத்தி தொழில் செய்யும் தொழில் முனைவோர்களுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு பெறவும். மத்திய, மாநில அரசுகளின் மானியங்களைப் பெறவும் இந்த பதிவு மிகவும் அவசியம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Reselling Business Ideas in Tamil

ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் | Reselling Business Ideas in Tamil

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அதிரடி லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்..!

Glitter Powder Manufacturing Business in Tamil

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!