இரண்டு கோடி வருமானம் தரும் அருமையான சுயதொழில் | Vanilla Farming Business Plan in Tamil
Vanilla Farming Business Plan in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்று நாம் இரண்டு கோடி ரூபாய் வருமானம் வர கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். இதற்கு உங்களிடம் சிறிய அளவில் இடம் இருந்தாலே போதும். அதாவது நாம் தெரிந்துகொள்ள இருக்கும் தொழில் யோசனை என்னவென்றால் vanilla farming தொழிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சாதாரணமாக நாம் ஒரு கிலோ Vanilla Making செய்தாலே அதனை நாம் 40,000/- ரூபாய் வரை விற்பனை செய்துவிடலாம். வெண்ணிலா பீன்ஸில் இருந்து தான் ஐஸ் கிரீம், சாக்லேட், கேக் இது போன்ற தின்பண்டங்களை தயார் செய்வதற்க்கான வெண்ணிலா எசன்ஸ் தயார் செய்யப்படுகிறது. ஆக நாம் Vanilla Farming செய்து விற்பனை செய்தால் நல்ல வருமானம் பெற முடியும். வெண்ணிலா பீன்ஸ் வளர்ப்பு தொழிலை கேரளா, கர்நாடக மற்றும் தமிழ் நாட்டில் செய்து வருகின்றன. சரி வாங்க அதனை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இடம்:
நீங்கள் இந்த தொழில் தொடங்க சின்ன அளவில் அதாவது 20 சென்ட் இடம் இருந்தாலே போதும் வெண்ணிலா பீன்ஸ் வளர்த்து விற்பனை செய்யலாம். இரண்டு 20 சென்ட் இடத்தில் கிட்டத்தட்ட 200 செடிகளை வளர்க்க முடியும்.
வெண்ணிலா பீன்ஸ் வளர்ப்பு மற்றும் சில தகவல்கள்:
இந்த வெண்ணிலா பீன்ஸ் செடி கிட்டத்தட்ட 5 அடி வரை வளரக்கூடியது.
இதனை பயிரிட மார்ச் முதல் ஏப்ரல் வரை சிறந்த காலமாகும்.
பயிர் செய்த பிறகு நீங்கள் கண்டிப்பாக மூன்று வருடன் வரை காத்திருக்க வேண்டும்.
ஒரு செடியில் இருந்து நீங்கள் 2 கிலோ வெண்ணிலா பீன்ஸை சாகுபடி செய்ய முடியும்.
நீங்கள் சாகுபடி செய்த வெண்ணிலா பீன்ஸை நன்கு காயவைத்து விற்பனை செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு கிலோ வெண்ணிலா பீன்ஸை 40,000 ரூபாய் வரை விற்பனை செய்யலாமாம். அதுவே செடியில் இருந்து பறித்து காயவைக்காமல் அப்படியே விற்பனை செய்தீர்கள் என்றால் ஒரு கிலோவிற்கும் 5000 ரூபாய் மட்டும் தான் லாபம் கிடைக்கும்.
Dry Beans-ஐ தயார் செய்ய நாம் சாதாரணமாக வெளியில் வைத்து Dry செய்ய கூடாது. இதனை Dry செய்வதற்கென்று தனியாக செண்டர் இருக்கிறது அங்கு சென்று வெண்ணிலா பீன்ஸை கொடுத்து Dry செய்து கொள்ளலாம்.
இந்த செடிகளை வளர்க்கும் போது சில வகையான பூச்சிகள் பிரச்னையும் இருக்கும் இதனை தடுப்பதற்கும் இயற்கை பூச்சி கொல்லிகள் உள்ளது. மேலும் இதனை எப்படி வளர்க்க வேண்டும் என்பதாகும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது அங்கு சென்று பயிற்சி பெற்றும் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். ஒரு முறை இந்த செடிகளை வளர்த்தால் போதும் 14 வருடம் வரை இந்த செடி செழிப்பாக இருக்கும்.
வருமானம் – Vanilla Farming Business Plan in Tamil:
ஒரு ஏக்கருக்கு 300 கிலோ முதல் 600 கிலோ வரை வெண்ணிலா பீன்ஸை சாகுபடி செய்ய முடியும்.
6 கிலோ வெண்ணிலா பீன்ஸை Dry செய்தால் நமக்கு 1 கிலோ Vanilla Dry Beans கிடைக்கும்.
உதாரணத்திற்கு 500 கிலோ பீன்ஸை சாகுபடி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக அதனை Dry செய்து விற்பனை செய்வதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
முதலீடு:
இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு, செடிகளை பயிரிட, பராமரிக்க, Dry செய்ய என்று மொத்தமாக 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். இதனை நாம் சரியான முறையை வளர்த்துவிட்டோம் என்றாலே போதும் இதன் மூலம் கிடைக்கும் லாபம் என்பது மிகவும் அதிகம் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
500 ரூபாய்க்கு வாங்கி 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் அருமையான தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |