லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..!

Advertisement

லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..! Washer Making Business in Tamil..!

Washer Making Business in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் வாஷர் தயாரிப்பு தொழில் பற்றி தெரிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த வாஷரை மெக்கானிக்கல் துறைகள் மற்றும் கன்சக்சன் துறைகளில் அதிகளவு பயன்படுத்துகின்றன. இருப்பினும் இந்த வாஷர் பயன்படுத்தும் அளவுகள் மட்டும் வேறுபடுமே தவிர பல தொழிற்சாலை துறைகளில் இந்த வாஷர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. எனவே பயன்பாட்டிற்கு தகுந்ததுபோல் வாஷர் சைஸினை பல வகைகளில் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

சரி இந்த வாஷர் தயாரிப்பு தொழில் பற்றிய விவரங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது இந்த தொழில் துவங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும். இதற்கான மூலப்பொருட்கள் என்னென்ன, இதற்கான இயந்திரம் எங்கு கிடைக்கும் மற்றும் இந்த தொழில் மூலம் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..!

Washer Making Business in Tamil..!

மூலப்பொருட்கள்:-

mild steel

வாஷர் தயார் செய்வதற்கு MS Steel மூலப்பொருள் அதிகளவு பயன்படுத்துகின்றன.

இதன் விலை தற்பொழுது 1 கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்களை தாங்கள் அணைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தொழில் துவங்க நாம் அவசியம் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்:-

washer Size

இந்த வாஷர் தயாரிப்பு தொழில் செய்ய அவசியம் தாங்கள் ISO 7089 Standard சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அதன் பிறகு இந்த வாஷர் தயாரிப்பு தொழிலுக்கு என்று Dimensions இருக்கிறது.

அதாவது எந்தெந்த Size-யில் வாஷர் தயார் செய்ய வேண்டும் என்ற அட்டைவனை உள்ளது. அந்த அளவுகள் படி தான் வாஷர் தயார் செய்ய வேண்டும்.

எனவே அந்த அட்டைவனையை தங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்பொழுது தான் எந்தெந்த Size-யில் வாஷர் தயார் வேண்டும் என்று தங்களுக்கு தெரியவரும்.

தேவைப்படும் இயந்திரம்:-

flat washer making machine

இந்த வாஷர் தயாரிப்புக்கு தேவைப்படும் இயந்திரம் Flat Washer Making Machine. இந்த இயந்திரத்தின் விலை தற்பொழுது 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இயந்திரம் முழுக்க முழுக்க மோட்டாரில் இயங்கக்கூடியது.

மேலும் இந்த இயந்திரம் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனையில் உள்ளது. வேண்டுமென்றால் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தை இயக்குவது என்பது மிகவும் எளிது. எனவே இந்த இயந்திரத்தை இயக்க கட்டாயம் பயிற்சி தெரிந்த ஒரு வேலை ஆட்கள் தேவைப்படுவார்கள்.

மேலும் ஒரு மணி நேரத்தில் இந்த இயந்திரத்தின் மூலம் 5000 வாஷர் தயார் செய்யலாம். அடுத்ததாக இந்த தொழில் துவங்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதலீடு:-

இயந்திரம் வாங்க – 1.50 லட்சம் தேவைப்படும், cutting table வாங்க – 50 ஆயிரம் தேவைப்படும், மூலப்பொருட்கள் வாங்க -1 லட்சம் தேவைப்படும் மற்றும் இதர செலவுகளுக்கு 50 ஆயிரம் தேவைப்படும்.

எனவே இந்த தொழில் துவங்க கிட்டத்தட்ட 3.50 லட்சம் முதலீடாக தேவைப்படும்.

மாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில்..!

வருமானம்:-

வாஷர் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை ஒரு நாளிற்கு 40,000 வாஷர் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யும்பொழுது.

வேஷ்டேஜ் மற்றும் இதர செலவுகள் போக ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் லாபம் கிடைக்கும்.

எனவே ஒரு நாளில் 40 ஆயிரம் வாஷர் உற்பத்தி செய்யும்பொழுது 1,20,000/- லட்சம் லாபமாக கிடைக்கும்.

சந்தைவாய்ப்பு:-

தாங்கள் தயார் செய்த வாஷரை மெக்கானிக்கல் மற்றும் கன்சக்சன் போன்ற துறைகளில் அதிகளவு பயன்படுத்துகின்றன. எனவே அவர்களிடம் ஆர்டர் பெற்று தாங்கள் தயார் செய்த வாஷரை விற்பனை செய்யலாம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement