இந்த தொழிலை இரண்டு முறையில் செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்..!

Wholesale Vegetable Business in Tamil

Wholesale Vegetable Business in Tamil

இன்றைய காலத்தில் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக கூட மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அவர்கள் எல்லாம் தங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு சுய தொழிலை தொடங்கி வாழ்க்கையை சீராக நடத்தி செல்லலாம். ஒரு சிலருக்கு சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்தால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழிலை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் Wholesale Vegetable Distribution தொழில் தான். இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி உங்கள் வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பை அதிகரித்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Wholesale Vegetable Business Plan in Tamil:

Wholesale Vegetable Business Plan in Tamil

இந்த உலகம் அழியும் வரை அழியாத ஒரு சில தொழில்கள் உள்ளன. அப்படி அழிவே இல்லாத சில தொழில்களில் இந்த காய்கறி வியாபாரம் செய்யும் தொழிலும் ஒன்று. இந்த தொழிலை தொடங்கிய யாரும் நஷ்டத்தை அடைந்ததே கிடையாது. அதனால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பெறலாம்.

தொழிலை எப்படி தொடங்குவது:

இந்த தொழிலை நீங்கள் இரண்டு முறையில் தொடங்கலாம். அதாவது நீங்கள் சொந்தமாக ஒரு இடத்தில் நிலையான கடையை வைத்தும் செய்யலாம். அப்படியில்லை என்றால் Wholesale-லாக வாங்கி அதனை பல கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.

இப்பொழுது இரண்டாவது முறையை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

வாங்கி கைமாத்தி விட்டாலே போதும் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்

தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:

இந்த தொழிலுக்கான முக்கியமான மூலப்பொருள் என்று பார்த்தால் காய்கறிகள் தான். நீங்கள் வாங்கும் காய்கறிகளின் தரத்தை பொறுத்து அதன் விலை மாறுபடும். அதனால் இந்த தொழிலுக்கான முதலீடும் மாறுபடும்.

தோராயமாக உங்களுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம்.

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவு பொருள் சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் தங்கள் கண்டிப்பாக FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதே போல் இந்த தொழில் செய்வதற்கு உங்களுக்கு தோராயமாக 1000 sq.ft இட வசதி தேவைப்படும். 

சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

தொழில் செய்யும் முறை:

இந்த தொழிலை நீங்கள் செய்வதற்கு முதலில் நீங்கள் காய்கறிகள் விளைவிக்கும் இடங்களுக்கும் சென்று குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி கொள்ளுங்கள்.

பின்னர் நீங்கள் வாங்கி வைத்துள்ள நிரந்தரமாக ஒரு இடத்தில் காய்கறி கடையை வைத்து காய்கறிகளை விற்கும் கடைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு Distribution செய்யுங்கள்.

வருமானம்: 

நீங்கள் நேரடியாக காய்கறிகளை விளைவிக்கும் இடங்களிடம் இருந்து வாங்குவதால் உங்களுக்கு அந்த காய்கறிகள் மிகவும் குறைந்த விலையில் தான் கிடைக்கும். அதனால் அந்த காய்கறிகளை நீங்கள் மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் பொழுது ஒவ்வொரு கடைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து பெற்று கொள்ளலாம்.

அதாவது ஒரு கடைக்கு 5,000 ரூபாய்  என்று நிர்ணயிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் தோராயமாக 10 கடைகளுக்கு உங்களிடம் உள்ள காய்கறிகளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

அதனால் இந்த Wholesale Vegetable Distribution தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் 2 மணிநேரம் வேலை செய்தாலே 5,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil