எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் | Payir Seiya Ugantha Matham in Tamil

Payir Seiyum Kalam in Tamil

பயிர் செய்யும் காலம் | Payir Seiyum Kalam in Tamil

நாம் உண்ணும் உணவிற்கு அடிப்படையாக இருப்பது விவசாயம் தான். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறோம். பயிரிடப்படும் பயிர் வகைகள் அந்தந்த பகுதிகளுக்கு பொருத்தமான பல்வேறு நீர்ப்பாசன முறைகளை அறிந்து வைத்து விவசாய தொழிலை விவசாயிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். விவசாய தொழிலில் கைதேர்ந்தவர்களுக்கு எந்த மாதத்தில் எந்த பயிரை விதைக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக விவசாயம் செய்ய தொடங்கும் நபர்களுக்கு விவசாயத்தில் அந்த அளவு அனுபவம் இருக்காது. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் 12 மாதங்களில் எந்த மாதிரியான பயிர்களை பயிர் செய்யலாம், எத்தனை நாட்களில் அறுவடை செய்ய வேண்டும் என்று படித்தறியலாம் வாங்க.

பயிர் செய்யும் மாதங்கள் – எந்த மாதத்தில் என்ன பயிரிடலாம்:

ஜனவரி:

மார்கழி, தை (ஜனவரி) மாதங்களில் கத்தரிக்காய், மிளகாய், பாகற்காய், தக்காளி, சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, கீரைகள் போன்றவற்றை பயிரிடலாம்.

பிப்ரவரி:

தை, மாசி (பிப்ரவரி) மாதத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், வெண்டைக்காய், சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய், அவரைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தியை பயிர் செய்யலாம்.

மார்ச்:

மாசி, பங்குனி (மார்ச்) மாதத்தில் பாகற்காய், கோவைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், வெண்டைக்காய், தக்காளி.

ஏப்ரல்:

பங்குனி, சித்திரை (ஏப்ரல்) மாதங்களில் கொத்தவரை, வெண்டைக்காய், செடி முருங்கை போன்றவற்றை பயிரிடலாம்.

மே:

சித்திரை, வைகாசி (மே) மாதங்களில் கொத்தவரை, கத்தரி, செடி முருங்கை, தக்காளி பயிர் செய்தால் அமோக விளைச்சல் கிடைக்கும்.

எந்த மாதத்தில் என்ன பயிரிடலாம் – காய்கறி பட்டங்கள்:

ஜூன்:

வைகாசி, ஆனி (ஜூன்) தக்காளி, கோவைக்காய், கத்தரி, கீரைகள், பூசணிக்காய், வெண்டைக்காய் பயிரிடலாம்.

ஜூலை:

ஆனி, ஆடி (ஜூலை) மாதங்களில் பாகற்காய், சுரைக்காய், வெண்டைக்காய், தக்காளி, கொத்தவரங்காய், முள்ளங்கி, மிளகாய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை பயிரிடலாம்.

ஆகஸ்ட்:

ஆடி, ஆவணி (ஆகஸ்ட்) பாகற்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி, மிளகாய் பயிர் செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும்.

செப்டம்பர்:

ஆவணி, புரட்டாசி (செப்டம்பர்) கீரைகள், செடி முருங்கை, முள்ளங்கி, பூசணிக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை இந்த மாதத்தில் பயிர் செய்யலாம்.

அக்டோபர்:

புரட்டாசி, ஐப்பசி (அக்டோபர்) மாதங்களில் முள்ளங்கி, கத்தரிக்காய், செடி முருங்கை பயிர் செய்யலாம்.

நவம்பர்:

ஐப்பசி, கார்த்திகை (நவம்பர்) பூசணிக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய், தக்காளி, செடி முருங்கை போன்றவற்றை இந்த மாதத்தில் பயிரிடலாம்.

டிசம்பர்:

கார்த்திகை, மார்கழி (டிசம்பர்) மிளகாய், பூசணிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை பயிரிட்டால் நீங்கள் நல்ல விளைச்சலை பெற முடியும்.

அறுவடை செய்யும் காலம்:

அறுவடை செய்யும் மாதம் எது?
காய்கறிகள் பெயர் விதைகள் முளைக்க ஆரம்பமாகும் காலம் அறுவடை செய்யும் காலம் 
தக்காளி ஏழு நாட்கள் எழுபது நாட்கள் 
வெண்டைக்காய்ஐந்து நாட்கள் நாற்பது நாட்கள் 
கத்தரிக்காய்எட்டு நாட்கள் அறுபது நாட்கள் 
முள்ளங்கி ஐந்து நாட்கள் 30 – 40 நாட்கள் 
கேரட் எட்டு நாட்கள் 90 நாட்கள் 
வெங்காயம் எட்டு நாட்கள் 90 நாட்கள் 
கொத்தவரைஐந்து நாட்கள் 30 நாட்கள் 
மிளகாய் எட்டு நாட்கள் அறுபது நாட்கள் 
கொத்தமல்லி 10 – 12 நாட்கள் 40 – 50 நாட்கள் 
வெந்தயக்கீரை ஐந்து நாட்கள் 30 நாட்கள் 
பூண்டு எட்டு நாட்கள் 6 மாதம் (180 நாட்கள்)
அவரைக்காய் ஏழு நாட்கள் 40 நாட்கள் 
பீர்க்கங்காய் ஆறு நாட்கள் 40 நாட்கள்
பாகற்காய் 15 நாட்கள் 40 நாட்கள்
புடலங்காய்10 நாட்கள் 50 நாட்கள் 
சுரைக்காய் 10 நாட்கள் 60 நாட்கள் 

 

அரளி பூ சாகுபடி செய்யும் முறை

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>விவசாயம்