இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!
சாதாரணமாக இயற்கை பூச்சி விரட்டி பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி நாமே தயாரிக்கும் கரைசல் என கூறலாம். அதில் ஒன்றான வேம்பு பற்றி இப்போது நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!
இயற்கை பூச்சி விரட்டி:
வேம்பின் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்ற அனைத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இருப்பினும் வேப்பங்கொட்டை அதிலிலும் சிறந்து விளங்குகிறது.
வேம்பு கரைசல் 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவையாக உள்ளது. வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அதில் உள்ள அசாடிராக்டின் என்பதுதான்.
அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
இவை பயிர்களை உண்ணும் பூச்சிகளை தடுப்பதோடு, பூச்சிகள் முட்டையிடுவதையும், அதிலிருந்து வெளிவரும் பூச்சிகளை தடுக்கும் வகையிலும் உள்ளது. மேலும் பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
வேம்பானது அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள், நாவாய் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கும் திறன் படைத்தவையாக உள்ளது.
மேலும் நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பெரிதும் பங்களிக்கிறது.
நெற்பயிரில் வேப்பெண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறையும்.
மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..!
வேப்பங் கொட்டைச்சாறு 5 சதவீத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவம் பாதிக்கப்பட்டு, அதன்மூலம் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது.
வேப்பெண்ணெய் நெற்பயிரை தாக்கும் கதிர் நாவாய்ப் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் குறையும்.
வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினி தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது.
நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை கம்பளி புழுக்கள் தொடர்ந்து உண்பதால் அவற்றை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!
இயற்கை பூச்சி விரட்டி நன்மைகள்:
வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
வேம்பானது பூச்சிகளை அழிப்பதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன.
இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை.
வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்ள இயலாது.
வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
எனவே வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம். |