காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி?

காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி?

காய்கறி கழிவு உரம் – வணக்கம் இன்று நாம் வீட்டிலேயே இயற்கை உரம் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.  அதாவது நமது சமையலறையில் சேரும் காய்கறி கழிவுகள் மற்றும் நம் தோட்டத்தில் வளர்ந்து கொட்டும் காய்ந்த இலைகள் போன்ற கழிவுகளை குப்பையில் கொட்டலாம். இவற்றை உரமாக்குவது எப்படி என்று இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.

சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

காய்கறி கழிவு உரம் – தேவையான பொருட்கள்:

தினமும் சமையலறையில் சேரும் காய்கறி கழிவு, பழ தோல், பூ கழிவுகள், முட்டை ஓடு (முட்டை ஓட்டினை நன்கு தூள் செய்து கொள்ளவேண்டும்), காய்ந்த இலைகள் ஆகியவற்றை ஈரப்பதம் இல்லாதவாறு வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும்.

தேங்காய் நார், ஒரு ஸ்பூன் compost microbes powder அல்லது மணல் ஒரு கப், டீ தூள் ஒரு ஸ்பூன், புளித்த தயிர் ஒரு டம்ளர் ஆகியவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்பொழுது காய்கறி கழிவு உரம் தயாரிக்கும் முறை பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்ளலாம் வாங்க…

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

வீட்டில் காய்கறி கழிவு உரம் தயாரிக்கும் முறை ஸ்டேப்: 1

ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்து கொள்ளவும். வாளியின் கீழ்புறம் மற்றும் வாளியை சுற்றி சிறு சிறு ஓட்டை இடவேண்டும்.

அதன்பிறகு இந்த வாளியில் காய்ந்த இலைகளை முதலில் போடவேண்டும், பின்பு இதனுடன் ஒரு ஸ்பூன் compost microbes powder அல்லது ஒரு கப் தோட்டத்தில் உள்ள மண்ணை சேர்க்க வேண்டும்.

வீட்டில் காய்கறி கழிவு உரம் தயாரிக்கும் முறை ஸ்டேப்: 2

பின்பு இதனுடன் தேங்காய் நாரினை பிய்த்து வாளியில் போட வேண்டும்.

இதை தொடர்ந்து தனியாக சேர்த்து வைத்துள்ள காய்கறி கழிவுகள், பழ தோள்கள், பூ கழிவுகள், முட்டை ஓடு, டீ தூள் கழிவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பின்பு திரும்பவும் ஒரு முறை compost microbes powder மற்றும் தேங்காய் நார் சேர்த்த ஒரு நீளமான குச்சியை கொண்டு கிளறிவிட வேண்டும்.

வீட்டில் காய்கறி கழிவு உரம் தயாரிக்கும் முறை ஸ்டேப்: 3

நன்கு கிளறிய பின்பு எடுத்து வைத்துள்ள புளித்த தயிரினை கொஞ்சம், கொஞ்சமாக இந்த கலவையில் தெளித்து அடிப்பகுதி வரை கிளறிவிட வேண்டும்.

பின்பு இந்த வாளியை ஒரு அகலமான டப்பாவின் உள்ளே வைக்க வேண்டும். பின்பு வெயில் படாத இடத்தில் இந்த வாளியை வைத்து காற்று புகாத அளவிற்கு மூடி வைக்க வேண்டும்.

வீட்டில் காய்கறி கழிவு உரம் தயாரிக்கும் முறை ஸ்டேப்: 4

பிறகு மூன்று நாள் கழித்த பின் வாளியை திறந்து திரும்பவும் ஒரு குச்சியை கொண்டு கிளறிவிடுங்கள். திரும்பவும் சேர்ந்த சமையலறை கழிவுகளை, இந்த கலவையுடன் சேர்த்து கிளறிவிடுங்கள். இவ்வாறு இரண்டு வாரம் வரை சமையலறை கழிவுகளை சேர்த்து கிளறிவிட வேண்டும். இரண்டு வாரம் கழித்த பின்பு சமையலறை கழிவுகளை சேர்க்க வேண்டாம்.

வீட்டில் காய்கறி கழிவு உரம் தயாரிக்கும் முறை ஸ்டேப்: 5

அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை இந்த கலவையை கிளறிவிட வேண்டும். 60 நாட்களில் நமக்கு நல்ல இயற்கை உரமாக மாறி இருக்கும். இவற்றை ஒரு பெரிய துளைகள் உள்ள சல்லடையில் கொட்டி நன்றாக சலித்து கொள்ளுங்கள்.

இந்த இயற்கை உரத்தை ஒவ்வொரு செடிகளுக்கும், ஒரு கைப்பிடியளவு போடுங்கள் செடி நல்ல வளமாக வளரும்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..!

குறிப்பு:-

சேர்க்ககூடாத காய்கறி கழிவுகள் சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற தோல் கழிவுகளை சேர்க்க கூடாது.

இறைச்சியின் கழிவுகளையும் சேர்க்க கூடாது.

காய்கறி கழிவுகள் வைத்திருக்கும் வாளியின் அடிப்பகுதியில் வடியும் தண்ணீரினை கீழே ஊற்றிவிடாமல், ஒரு வாளி தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளித்து விடுங்கள். இவ்வாறு செய்வதினால் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Organic farming in tamil