டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?
உங்கள் செடியில் காய் சிறிதாக இருக்கிறதா?, பூ பூக்கவில்லையா? செடியின் இலைகள் சிறிதாக உள்ளதா?? இந்த மாதிரி பிரச்சனைகள் சரியாக Compost Tea தயார் செய்து அதை செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். காய் பிடிக்கும் செடி நன்றாக வளரும்.
சரி இந்த கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..
காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி? |
டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி? (How to make compost tea at home in tamil)
ஒரு அகலமான பக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு பங்கு மண்புழு உரத்தை நிரப்ப வேண்டும்.
பின் ஒரு கைப்பிடியளவு வேப்பம்பிண்ணாக்கு, ஒரு கைப்பிடியளவு கம்போஸ்ட் உரம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும்.
பின் பக்கெட் முழுவதும் தண்ணீர் ஊற்றி நிரப்பி, அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக கரைத்து கொள்ளவும்.
பிறகு இவற்றுடன் ஒரு கட்டி வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..! |
பின்பு கலந்த இந்த கலவையை ஒரு இடத்தில் வைத்து மூன்று நாட்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
இவ்வாறு மூன்று நாட்கள் ஊற வைப்பதினால் அவற்றில் உள்ள நுண்ணுயிரிகள், நல்ல பக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது.
மூன்று நாள் கழித்த பின்பு இந்த கலவையை செடிகள் மீது தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்கு வளர ஆரம்பிக்கும், அதேபோல் காய்கள் மற்றும் பூக்கள் அதிகம் பிடிக்க ஆரம்பிக்கும்.
இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!! |
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Pasumai Vivasayam in Tamil |