இயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி ???
செடிகள் மற்றும் பயிர்களை அதிகம் தாக்கும் பூச்சிகளை விரட்ட இயற்கை பூச்சி விரட்டிகளை நம் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.
உரங்கள் என்றால் என்ன??? அதன் வகை..! |
தேமோர் கரைசல்
பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த, பூச்சிகளை விரட்ட இந்த தேமோர் கரைசல் மிகவும் பயன்படுகிறது. இந்த தேமோர் கரைசல் தயாரிக்கும் முறையை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தேவையான பொருட்கள்:
- புளித்த மோர் – 5 லிட்டர்,
- தேங்காய்ப்பால் – 1 லிட்டர்,
- தேங்காய் துருவல் – 10 தேங்காய்,
- அழுகிய பழங்கள் – 10 கிலோ.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை:
மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைக்க வேண்டும்.
இவற்றுடன் 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை பொட்டலம் போல் கட்டி அதில் போட வேண்டும்.
தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்களில் தேமோர்க் கரைசல் தயாராகி விடும்.
8-ம் நாள், ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- புளித்த மோர் – 5 லிட்டர்,
- இளநீர் – 1 லிட்டர்,
- அரப்பு இலைகள் – 1 முதல் 2 கிலோ,
- 500 கிராம் பழக்கழிவுகள் அல்லது பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு முறை மற்றும் பயன்கள்..! |
அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறை – இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide):
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு – மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒரு வார காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்.
இந்த ஒரு வார காலத்தில் நொதிக்கத் தொடங்கி விடும்.
இந்த நொதித்த கரைசலே அரப்பு மோர் கரைசல் ஆகும். அரப்பு இலைத் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழக் கலவைகளுக்குப் பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும்.
நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.
ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ,
- தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்,
- சோப்பு – 200 கிராம்,
- மெல்லிய வகை துணி
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு (How To Make Natural Insecticide) – வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக்கும் முறை:
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு – மேல் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வேண்டும்.
இரவு முழுவதும் பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லின் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும்.
எப்பொழுதும் புதிதாகத் தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம் 3.30 மணிக்குப் பின்பு வேப்பங்கொட்டை கரைசலைத் தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..! |
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |