மாடி தோட்டத்தில் மக்காச்சோளம் (Corn Plants) பயிரிடும் முறை:
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான மக்காச்சோளம் (Corn Plants) நம் மாடி தோட்டத்தில் எப்படி சாகுபடி செய்யலாம் என்று இப்போது நாம் காண்போம்.
தேவையான பொருட்கள்:
- ஒரு பெரிய தொட்டி
- அடியுரமாக இட மணல், மண்புழு உரம், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.
- விதைகள்.
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.
பயிரிடும் முறை:
முதலில் தொட்டியில் மண் நிரப்ப வேண்டும். மண்ணில் மணல் கலவை அதிகளவு கலந்து மண் நிரப்ப வேண்டும்.
பிறகு விதை நமக்கு எளிதாகவே கிடைக்கும், விதை கடைகளில் சென்று வாங்கி, நம் மாடி தோட்டத்தில் பயிரிடலாம்.
விதைக்கும் முறையை பார்ப்போம். மாடி தோட்டத்தில் தொட்டிகள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அத்தனை விதைகளை விதைக்க முடியும். அதாவது 10 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட தொட்டில், குறிப்பாக 15 விதைகளை விதைக்க முடியும்.
விதைகள் விதைத்த ஐந்தாவது நாட்களில் இருந்தே செடிகளில் துளிர்கள் விட ஆரமித்து விடும்.
விதைகள் விதைத்த நாட்களில் இருந்தே பூவாளிகள் கொண்டு, காலை அல்லது மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து விடவும்.
செடிகள் நன்கு வளர ஆரமிக்கும். குறிப்பாக மண் கலவை கலக்கும்போது அவற்றில் மாட்டு எரு(இயற்கை உரம்) கலந்து மண் தயார் செய்தால் செடிகள் நன்கு செழிப்பாக வளர ஆரமிக்கும்.
செடிகள் நன்றாக வளர்ந்த உடன் கதிர்கள் வைக்க ஆரமித்துவிடும், கதிர்கள் வைக்கும்போதே பூச்சிகள் கதிர்கள் மீது மொய்க்க ஆரமித்து விடும். அவற்றை கண்டு பயப்பட வேண்டாம். பூச்சிகள் மகரந்த செயற்கையை அதிகரிக்க உதவுகிறது.
இந்த செடிகளை பொறுத்தவரை அதிகமாக நோய்கள் தாக்குவது இல்லை, குறிப்பாக அசுவினி பூச்சிகள் தாக்குதல்கள் இருந்தால் வேப்பிலையை அரைத்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டு அரைத்து இரண்டையும் ஒன்றாக தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளித்தால் அசுவினி பூச்சி தாக்குதல்களை தடுத்துவிட முடியும்.
குறிப்பாக சோளம் முதிர்ச்சி அடைவதற்கு 90 முதல் 100 நாட்கள் வரை ஆகும்.
முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதலும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும்.
கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும்,காய்ந்தும் காணப்படும் இப்பருவம் அறுவடைக்கேற்றது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.