வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாடி தோட்டத்தில் வெங்காயம் சாகுபடி முறை..! Onion cultivation in tamil..!

Updated On: February 12, 2022 8:50 AM
Follow Us:
onion cultivation in tamil
---Advertisement---
Advertisement

மாடி தோட்டத்தில் வெங்காயம் சாகுபடி முறை..! Onion cultivation in tamil..!

நாம் அனைவரும் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை நம் தோட்டத்திலேயே அல்லது மாடித்தோட்டத்திலோ பயிரிடலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நம் உடல் நலத்தை பாதுகாப்பதுடன், இயற்கையான முறையில் காய்கறிகளை சாகுபடி செய்த மன திருப்தியும் கிடைக்கும். எனவே இந்த பதிவில் மாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிடுவதை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க.

ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

மாடி தோட்டத்தில் வெங்காயம் பயிரிட தேவையான பொருட்கள்:-

மாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிட (onion cultivation in tamil) தேவையான பொருட்கள் என்று பார்த்தால் grow bags அல்லது தொட்டி, அடியுரமாக இடுவதற்கு சிறிதளவு மண், மக்கிய தென்னை நார் கழிவுகள், செம்மண், மண்புழு உரம், பஞ்சகாவிய, வேப்பம் பிண்ணாக்கு போன்றவைகள் தேவைப்படும்.

பின் விதை வெங்காயம் அல்லது விதை மற்றும் தண்ணீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான் போன்றவைகள் மாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிடுவதற்கு தேவைப்படும்.

தொட்டிகள்:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை விதை வெங்காயத்தை நேரடியாக ஊன்றலாம் அல்லது கோவை வேளாண் கல்லூரியில் கிடைக்கும் விதைகளை விதைக்கலாம். விதைகளை முதலில் குழிதட்டில் விதைத்து பின் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.

இதன் இடைவெளியானது தேர்வு செய்யும் பைகளை பொறுத்து மாறுபடும். விதையை சிறிது ஆழத்தில் ஊன்ற வேண்டும். வெங்காய நாற்றுகளின் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்ட பிறகு எளிதாக வேர் பிடித்து வளர்ந்து விடும்.

தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..!

நீர் நிர்வாகம்:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை விதை வெங்காயத்தை ஊன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்:

மாடித்தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு சாணத்தை கரைத்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை இதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது.

வேப்பம் புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய் 3 மிலி (ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் காணப்பட்டால் கட்டுப்படுத்தப்படும்.

அறுவடை:

மாடி தோட்டம் வெங்காயம் சாகுபடி (onion cultivation in tamil) பொறுத்தவரை நாற்று மூலம் நட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கும் போது இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம். செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம்.

வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்ய வேண்டும். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை.

நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம். இவ்வாறு அறுவடை செய்வதால் நன்கு திரண்ட வெங்காயம் கிடைக்கும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> pasumai vivasayam in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now