முருங்கை சாகுபடி செய்வது எப்படி | Murungai Sagupadi in Tamil
இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் சாகுபடி போன்று ஆண்டு முழுவதும் நல்ல லாபம் தரக்கூடிய சாகுபடி தான் முருங்கை சாகுபடி. செடி முருங்கையை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம். இந்த சாகுபடி திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு அமோக விளைச்சலை தருகிறது. தற்போது முருங்கை வெளி மாநிலங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை சரிவில்லாமல் நல்ல லாபத்தை பெற்று தருகிறது. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை பெற்று தர கூடிய முருங்கை சாகுபடி எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
சாகுபடி வகைகள் – Murungai Sagupadi:
இந்த சாகுபடியில் இரண்டு வகை உள்ளது அவை
- செடி முருங்கை
- மர முருங்கை
மரங்களில் வளராமல் செடிகளில் வளரும் முருங்கை காய்களை செடி முருங்கை என்று அழைக்கப்படுகிறது.
இரகங்கள் – Murungai Sagupadi in Tamil:
- பி.கே.எம் 1, கே.எம் 1, பி.கே.எம். 2 என்று மூன்று செடி முருங்கை ரகங்கள் உள்ளன.
மண்:
- இந்த செடி முருங்கை அனைத்து வகையான மண்ணிலும் வளர கூடியது. ஆனால் செம்மண், கரிசல் மண் ஆகிய நிலத்தில் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சல் கிடைக்கும்.
பருவ காலம் – முருங்கை சாகுபடி:
- இந்த முருங்கையை நாம் ஜூன்-ஜூலை மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய மாதங்களில் பயிரிடலாம்.
- ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடவு செய்தால் லாபம் கிடைக்கும். ஆனால் இந்த மாதங்களில் மழை குறைவாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதை நடவு செய்ய ஏக்கருக்கு 200 கிராம் விதைகள் தேவைப்படும்.
சாகுபடி செய்யும் முறைகள் – Chedi Murungai Cultivation
- முதலில் நிலத்தை நன்கு சமமான அளவிற்கு 45 செ.மீ அகலம், 45 செ.மீ நீளம், 45 செ.மீ ஆழத்தில் குழியை தோண்டி கொள்ள வேண்டும். இந்த குழியை ஒரு வாரம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து இருந்து பின் 15 கிலோ தொழு உரம் போட வேண்டும்.
- பின் ஏழு நாட்கள் கழித்து 15 கிலோ அளவு தொழு உரம், அதன் மேல் மண் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். முருங்கை விதைகளை விதைப்பதற்கு முன்னர் நீர் பாய்ச்சி விட்டு பின்னர் 3 செ.மீ ஆழத்தில் முருங்கை விதைகளை விதைக்க வேண்டும்.
- விதைத்த மூன்று நாட்கள் கழித்து தேவையான அளவு நீர் ஊற்ற வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சாம்பல் சத்து, யூரியா, சூப்பர் பாஸ்பேட், (மணிச்சத்து) போன்ற உரங்களை இட வேண்டும்.
- முருங்கை செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் அதன் நுனி கொழுந்தை கிள்ளி விட வேண்டும், அவ்வாறு செய்வதன் மூலம் பக்கவாட்டில் கிளைகள் உருவாகி செடி நன்கு படர்ந்து வளரும். இரண்டு மாதங்கள் கழித்து விதைத்த செடி முருங்கையை அறுவடை செய்ய வேண்டும்.
- நடவு செய்த ஆறு மாதத்திற்கு பிறகு முருங்கைக் காய்கள் காய்க்க தொடங்கும். முருங்கை காய்கள் வளர்ந்த பிறகும் இந்த செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் பராமரித்து பயன்படுத்தலாம். இந்த முருங்கையை பயன்படுத்துகின்ற ஒவ்வொரு முறையும் தேவையான அளவு உரங்களை சேர்க்க வேண்டும்.
- செடி முருங்கை நன்றாக வளர்வதற்கு இயற்கை உரங்களான சாணம், காய்ந்த இலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மகசூல்:
- ஒவ்வொரு செடி முருங்கையிலும் ஆண்டுக்கு 180 முதல் 200 முருங்கைக்காய்கள் கிடைக்கின்றன. ஆண்டுக்கு 20 டன் முருங்கைக்காய்கள் ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது.
- வருடத்திற்கு ஒரு மாதத்தில் 100 கிலோ காய்களுக்கு மேல் கிடைக்கும்.
பூச்சி தாக்குதலை தடுக்கும் முறைகள் – முருங்கை சாகுபடி:
- வேர் அழுகல் நோய், பூ உதிர்தல், பிஞ்சு உதிர்தல், பூச்சித் தாக்குதல் போன்றவற்றை தடுப்பதற்கு மானோகுரோட்டோபாஸ் என்ற மருந்தை பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்து கலந்து தெளிக்க வேண்டும்.
- மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் வளர்ந்த முருங்கைக்காய்களை பறித்து விட வேண்டும்.
- பூ மற்றும் மொட்டுகளில் இருக்கும் துளைப்பான் பூச்சி தாக்குதலை சரி செய்ய பூக்கள் மலர ஆரம்பித்தவுடன் 10 நாள்கள் கழித்து டைக்குளோர்வாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
- முருங்கை பயிரில் கம்பளி பூச்சிகளின் தாக்குதலை சரி செய்ய தண்ணீரில் 2 மி.லி குளோரிபைரிபாஸ் அல்லது குயினால்பாஸ் மருந்தை பயன்படுத்தலாம்.
இயற்கை விவசாயம் சோயா மொச்சை சாகுபடி முறை..! |
இயற்கை விவசாயம் ரோஜா சாகுபடி முறை முழு விளக்கம்..! |
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |