இயற்கை விவசாயம் பயன்கள் | Five Layer Farming in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்று நம் பொதுநலம் பதிவில் இயற்கை விவசாயத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். அதாவது மா , பப்பாளி, வாழை, கொய்யா போன்ற பல வகைகள் சாகுபடி செய்யலாம். இதனை உயர் அடர்வு நடவு பல காடுகள் என்றும் சொல்லலாம். இதில் நடுமரம், உயர்மரம், நடுச்செடி, குறுமரம், புதர்ச்செடி, படர்ச்செடி என சாகுபடி செய்யலாம் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் பல வகையான செடிக்கொடி, பயிர்வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை எப்படி விவசாயம் செய்யலாம் என்று விரிவாக படித்து அறியலாம் வாங்க….
இயற்கை விவசாயம் சர்க்கரை வள்ளி கிழங்கு சாகுபடி |
சாகுபடி செய்யும் முறைகள்:
முதலில் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு முன்பு 2 அடி அகலம், 2 அடி ஆலம், 2 அடி உயரம் என 16 அடிக்கு குழிகள் எடுத்து விவசாயம் செய்ய வேண்டும்.
இப்படி குழிகள் எடுத்து செடிகளை வைப்பதினால் நான்கு மாதங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.
இதற்கு மொத்த செலவுகள் 85,000 ஆனாலும் அதன் சாகுபடி 5,00,000 வரை லாபம் கிடைக்கும்.
செடிகள் வைக்கும் முறைகள்:
இதில் ஒன்பது ரகம் மா, ஐந்து ரகம் கொய்யா, அத்தி, கமலா ஆரஞ்சு, மாதுளை,சீத்தா, எலுமிச்சை, போன்றவை நிலத்தில் சாகுபடி செய்யலாம்.
இந்த செடிகளின் நடு பகுதில் கொத்தவராங்க, கத்திரி, அவரை போன்ற செடிகள் வளர்க்கலாம்.
8 அடிகளுக்கு நடு பகுதில் தட்டபயிர்கள், ஆமானுக்கு, மிளகாய், வெண்டை, துவரை போன்றவை சாகுபடி செய்யலாம்.
இப்படி செய்வதால் எவ்வளவு மழை பெய்தாலும் செடிகொடிகளுக்கு எந்த விதமான சேதங்களும் ஏற்படாது.
உரங்கள் செலுத்தும் முறை:
ஒரு விவசாயிக்கு செடிகொடிகள் நல்ல ஒரு விளைச்சலை தரவேண்டும் என்று எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். அதை பொருத்து தான் அடுத்து என்ன செய்யலாம் என்றும் நினைப்பவர்களும் உண்டு. இந்த செடிகளுக்கு உரங்கள் எப்படி செலுத்துக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
செயற்கை உரம் மற்றும் நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியம் சேர்த்து 150 லிட்டர் தண்ணீர் ஊற்றி 1 கிலோ வெல்லம் போன்றவை சேர்த்து கலக்க வேண்டும். அதனை 24 மணி நேரம் கழித்து காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் உரங்கள் சேர்க்கலாம். இதனை செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
செடிகளில் பூச்சி இருப்பது இயற்கை தான். பூச்சிகள் வராமல் இருப்பதற்கு எந்த விதமான மருந்துகளும் சேர்க்க தேவையில்லை.
இந்த செடிகள் வளர்வதற்கு 1 வருடம் மட்டும் தண்ணீர் தேவைப்படும் அதன் பிறகு தண்ணீர் தேவைப்படாது.
இதேபோல் நீங்களும் உங்கள் ஏக்கரில் விவசாயம் செய்து பாருங்கள் அதிகம் சாகுபடி கிடைக்கும் …
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம |