இட்லி பூ கொத்து கொத்தா பெரியதாக பூக்க இதை மட்டும் செஞ்சி பாருங்க..!

Advertisement

இட்லி பூ செடி வளர்ப்பு

இத்தகைய நவீன காலத்தில் நிறைய வகையான பூக்கள் மாடித்தோட்டத்திலும் மற்றும் இயற்கை விவசாய முறையிலும் வளர்த்து வருகின்றனர். ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, சாமந்தி மற்றும் இட்லி பூ என நிறைய வளர்த்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் கூட அவற்றை சரியாக பராமரித்து செடியில் நிறைய பூக்கள் பூக்க வைப்பது என்பது மிகவும் கடினகமாக இருக்கும். அதற்காக தான் இதுநாள் வரையிலும் நீங்கள் கஷ்டப்பட்டு வளர்த்து வந்த இட்லி பூ செடியினை மிகவும் எளிய முறையில் பராமரித்து இடி நிறைய பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Flowers That Grow in Italy in Tamil:

இட்லி பூ செடி வளர்ப்பு

முதலில் நீங்கள் பதியம் செய்து வைத்துள்ள இட்லி பூ செடியினை வெயில் படுமாறு வைத்து கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லமால் அந்த செடி காயாத அளவிற்கு ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • மாட்டு சாணம்- 1 கைப்பிடி அளவு
  • மாட்டு கோமியம்- சிறிதளவு
  • பஞ்ச காவியம்- சிறிதளவு
  • புண்ணாக்கு- சிறிதளவு

மேலே எடுத்துவைத்துள்ள பொருட்களை ஒரு மண் பானையில் வைத்து நன்றாக உங்களுடைய கைகளால் பிசைந்து வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் எழுந்து தயார் செய்து வைத்துள்ள உரத்தினை செடிகளுக்கு அளித்து அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

 இந்த உரத்தினை செடிகளுக்கு அளிப்பதன் மூலம் செடிகளுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் கிடைத்து செடிகள் செழிப்பாக வளர்ந்து செடி நிறைய இட்லி பூ பூத்து குலுங்கும்.  

இதையும் படியுங்கள்⇒ மாடித்தோட்டத்தில் பன்னீர் ரோஜா கொத்து கொத்தாக பூக்க என்ன செய்ய வேண்டும்..!

மொட்டுகள் கருகி போகாமல் இருக்க:

idly poo chedi valarpathu eppadi

இப்போது கற்றாழை மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு இரண்டையும் மிக சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

இப்போதுஅரைத்து வைத்துள்ள கற்றாழை தண்ணீருடன் 1/2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து செடிகளுக்கு ஊற்றினால் போதும் இட்லி பூ செடியில் பூக்கள் எதுவும் கருகி போகாமல் நிறைய மொட்டுகள் வைக்கும்.

இதையும் படியுங்கள்⇒ செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை மட்டும் செய்யும்கள் போதும்..!

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம் 
Advertisement