வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்..!

Updated On: June 9, 2023 12:29 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Homemade Fertilizer for Gooseberry Tree in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நெல்லிக்காய் மரம் பலரது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், அதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, உடல் எடை குறைய, சர்க்கரை நோய் குணமாக நெல்லிக்காய் உதவுகின்றது. சிலரது வீட்டில் ரொம்ப நாட்களாக நெல்லிக்காய் மரம் இருக்கும். ஆனால் நெல்லிக்காய்கள் அதிகமாக இருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே காய்திருக்காது.

இப்படி உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்க வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

Natural Fertilizer for Gooseberry Tree in Tamil:

Natural Fertilizer for Gooseberry Tree in Tamil

சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே இந்த நெல்லிக்காய்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அனைவருமே தங்களின் வீட்டில் நெல்லிக்காய் மரத்தை வளர்ப்பார்கள். அப்படி நாம் அனைவரும் மிகவும் விரும்பி நமது வீட்டில் வளர்க்கும் நெல்லிக்காய் மரத்தில் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும்.

அதனால் நமது வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

  1. காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு 
  2. வேர்க்கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  3. வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  4. அரிசி கழுவிய தண்ணீர் – 4 லிட்டர்
  5. தயிர் – 1 லிட்டர் 

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.

உங்க வீட்டில் உள்ள பன்னீர் ரோஜா செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க தண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

வேர்க்கடலை புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேர்க்கடலை புண்ணாக்கிணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

காய்கறி கழிவுகளை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவுகளையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

தயிரை கலந்து கொள்ளுங்கள்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தயிரையும் அதனுடன் கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை பத்து நாட்கள் அப்படியே விடுங்கள். அதன் பிறகு இதனை வடிக்கட்டி உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

உங்க வீட்டில் இருக்கும் முல்லை பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை