எல்லா சீசனிலும் ஜாதி மல்லி பூத்துக் குலுங்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!

Advertisement

ஜாதி மல்லி பூ செடி அதிக பூக்க | How to Get more Flowers in Jathi Malli Plant in Tamil

வீட்டில் என்னதான் காய்கறி செடிகள், மரங்கள் வளர்த்து வந்தாலும் பூச்செடி வளர்க்க தான் பெரும்பாலானோர் ஆசைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் மல்லிகை செடி, ரோஜா செடி, ஜாதி மல்லி செடியை தான் அதிகம் வளர்க்க விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக ஜாதிமல்லியின் வாசனைக்காகவே ஜாதிமல்லி செடி அதிகமான வீடுகளில் வளர்த்து வருவார்கள். ஜாதிமல்லியின் வாசனைக்காகவே பல பெண்கள் இச்செடியினை வீட்டில் அதிகமாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஒழுங்கான பராமரிப்பு இல்லாததால் ஜாதி மல்லி பூ செடி பூக்காமல் இருக்கும்.

எனவே அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ள ஜாதி மல்லி செடி அதிகமாக பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி எல்லா சீசனிலும் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்.?

 ஜாதி மல்லி பூ செடி

  • ஜாதி மல்லி நடவு செய்யும்போது அதற்கு அடியுரமாக மக்கிய மாட்டு எருது, மட்கிய இலை தழைகள் கலந்த செம்மண் கலவையை இட வேண்டும்.
  • அதன் பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த உரத்தை கொடுக்க வேண்டும். உரம் கொடுக்கும் இடைவெளியில் ஜாதி மல்லி செடிக்கு பஞ்சக்காவியம் ஊற்ற வேண்டும்.
  • அடுத்து, மாதத்திற்கு ஒரு முறை மீன் அமிலத்தை ஜாதி மல்லி செடியின் வேர்ப்பகுதியில் படும்படி கொடுக்க வேண்டும்.
  • கவாத்து செய்ய வேண்டும்:
  • ஜாதி மல்லி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அதிகமாக பூக்க தொடங்கி 4 அல்லது 5 மாதத்திற்கு தொடர்ந்து அதிக பூக்கள் பூக்கும்.
  • ஜாதி மல்லி பூத்து முடியும் சீசனில் ஜாதி மல்லி செடியை நன்கு கவாத்து செய்து விட வேண்டும். கவாத்து செய்த பிறகு, மாட்டு எருது மற்றும் மட்கிய இலை தழைகளை அடியுரமாக இட வேண்டும்.
  • இவ்வாறு நீங்கள் ஜாதிமல்லி பூக்கும் சீசன் முடிந்ததும், செடியை கவாத்து செய்து விட்டீர்கள் என்றால் ஜாதி மல்லி எல்லா சீசனில் பூத்து குலுங்கும்.

கத்தரிக்காய் செடி வருடம் முழுவதும் கொத்து கொத்தாய் காய்க்க இந்த ஒரு பொருள் போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement