வீட்டிலேயே தொட்டியில் ஏலக்காய் செடி வளர்க்கும் முறை..!

ஏலக்காய் செடி வளர்ப்பு – How to Grow Cardamom from Seeds in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் வீட்டிலேயே தொட்டியில் ஏலக்காய் செடி வளர்க்கும் முறையை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம்.அதற்கு முன்பு ஏலக்காய் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்வோம். ஏலக்காய் ஒரு உணவிற்கு நல்ல மணமூட்டும் ஒரு பொருள் ஆகும். ஏலக்காயில் புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது. இது பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு மிகவும் பயன்படுகிறது. இத்தகையது குணங்கள் நிறைந்த இந்த ஏலக்காயை நமது வீட்டிலேயே வெறும் விதை மூலம் வளர்க்கலாம். அது எப்படி என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஜா செடியை வாங்கி வந்தால் அதில் இந்த தவறை செய்யாதீர்கள்..!

ஏலக்காய் செடி வளர்ப்பு – Elakkai Sedi Valarpu:ஏலக்காய்

உங்கள் வீட்டில் இருக்கும் ஏலக்காயை 5 எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஏலக்காயில் உள்ள விதைகளை மட்டும் தனியாக எடுத்து ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் ஊறவைக்கவும்.

7 மணி நேரம் கழித்து தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விதையை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு பூத்தொட்டியை எடுத்து அதில் முக்கால் அளவு தோட்டத்தில் செடி வளர்க்க பயன்படுத்தும் மண்ணை தொட்டியில் நிரப்பி, தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றவும்.

பிறகு ஊறவைத்து எடுத்து வைத்துள்ள விதையை அந்த மண்ணில் சேர்த்து லேசாக விதையை மண்ணினுள் அழுத்திவிடவும்.

பின் மீண்டும் மண்ணை விதையின் மீது தூவி, அப்படியே வைக்கவும். இந்த தொட்டியில் வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூன்று மாதங்களில் அதில் ஏலக்காய் செடி வளர்ந்து வந்துவிடும்.

இந்த செடிக்கு வெயில் அதிகமாக படக்கூடாது.. ஆக வெயில் ஓரளவு அடிக்கும் இடமாகவும் இருக்க வேண்டும், அதேபோல் கொஞ்சம் அந்த இடம் குளிச்சியாகவும் இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெயில் காலத்தில் ரோஜா செடியில் இலைகளும் பூக்களும் அதிகம் பூக்க இதை செய்யுங்கள்..!

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்