வீட்டில் பூச்செடி இருந்தால் மட்டும் போதாது..! செடி நிறைய பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா…?

how to grow flowers faster in tamil

How to Grow Flowers Faster 

அனைவருடைய வீட்டிலும் அழகிற்கு என்று நிறைய பூச்செடிகள் வளர்ப்பது உண்டு. அத்தகைய செடிகள் அனைத்தும் கடையில் வாங்கும் போது இருந்த செழிப்புடன் இப்போது இருப்பது இல்லை. நாமும் அதற்காக என்ன என்னவோ செய்து இருப்போம். ஆனால் அதற்கான பலன் என்று பார்த்தால் மிகவும் குறைவாக தான் உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பூச்செடிகளை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் அதற்கு என்ன உரத்தினை அளித்தால் செடி செழிப்பாக வளரும் என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த குறிப்பானது செடிநிறைய பூக்களை பூக்க செய்யும். சரி வாருங்கள் பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ செடி நிறைய சாமந்தி பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ட்ரை செய்து பாருங்கள்.. 

பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது:

பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது

செடிநிறைய மொட்டுகள் வைத்து பூக்கள் பூத்து குலுங்க கடையில் விற்கும் எந்த உரத்தினையும் வாங்கி பயன்படுத்த வேண்டாம். ஆகையால் அதற்கு மாறாக என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டேப்- 1

நீங்கள் வீட்டிற்கு இட்லி அல்லது தோசை செய்வதற்காக மாவு அரைப்பீர்கள். அந்த மாவில் 1/2 கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு அதனை ஒரு மூடி போட்டு மூடி 3 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

3 நாட்கள் கழித்த பிறகு மூடி வைத்துள்ள தோசை மாவினை பார்த்தீர்கள் என்றால் நன்றாக புளித்து செடிக்கு உரம் அளிப்பதற்கான பதத்திற்கு வந்துவிடும்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் 6 லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு புளித்த தோசை மாவினை அந்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

செடிகள் செழிப்பாக வளர்ந்து பூக்கள் செடி நிறைய பூப்பதற்கு இந்த தண்ணீர் ஒன்று போதும்.  ஏனென்றால் தோசை மாவு புளித்த பிறகு அதில் அதிகமாக நுண்ணுயிர்ச்சத்துக்கள் காணப்படும். அத்தகைய நுண்ணூயிர்சத்துகள் அனைத்தும் செடிக்கு அதிகமாக சத்துக்களை அளிப்பதற்கு உதவியாக இருக்கும்.  

இதையும் படியுங்கள்⇒ செம்பருத்தி செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை மட்டும் செய்யும்கள் போதும்.. 

செடிகளுக்கு உரம் அளிக்கும் முறை:

 பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்வது

நீங்கள் கலந்து வைத்துள்ளா தண்ணீரை செடிகளுக்கு ஊற்றிய பிறகு தான் எப்போதும் போல தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்படி செய்யாமல் இதற்கு மாறாக செய்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

ஆகாயல் கலந்து வைத்துள்ள தண்ணீரை காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் 1/2 லிட்டர் அளவிற்கு செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பூச்செடிகளும் செழிப்பாக வளர்ந்து செடி நிறைய பூக்கள் பூத்து குலுங்கும். 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்