தாமரை செடி வளர்ப்பு முறை – How to Grow Lotus Plant at Home in Tamil
How to Grow Lotus Plant at Home in Tamil – பொதுவாக வீட்டில் பலவகையான பூ செடிகளை வளர்க்க மிகவும் பிடிக்கும். அதிலும் பலர் வீட்டில் தாமரை செடி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அதனை எப்படி தாமரை செடியை வளர்க்க வேண்டும் என்று தெரியாது அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் தாமரை செடி வளர்க்கும் முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
தாமரை செடி வளர்ப்பு முறை – How to Grow Lotus Plant at Home in Tamil:
இன்றைய பதிவில் விதை மூலம் தாமரை பூ செடி வளர்ப்பு முறை பொறுத்தவரை, தரமான விதைகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
அதாவது விதையின் ஓடு கடினமாக இருப்பதால் முளை விடுவதில் தாமதம் ஏற்படலாம், அல்லது சில சமயம் முளைக்காமலும் போகலாம். எனவே தாமரை பூ வளர்ப்பு முறைக்கு எப்படி விதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு அதனை பராமரிக்கும் முறைபற்றி இங்கு நாம் காண்போம் வாங்க.
தாமரை பூ வளர்ப்புக்கு விதை தேர்வு செய்யும் முறை. ஒரு பாத்திரத்தை தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
பின்பு அவற்றில் போட்டால் மிதக்கும் விதைகள் முளைக்கும் தன்மை இல்லாமல் இருக்கலாம் அவற்றை நீக்கி விட்டு தண்ணீரில் மூழ்கி இருக்கும் விதைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முல்லை பூ காடு போல் பூத்து குலுங்க இதை மட்டும் முல்லை செடிக்கு கொடுங்க..!
பிறகு ஓர் கனமான பொருளால் உள் இருக்கும் பருப்பு அடிபடாமல் மேலிருக்கும் ஓட்டினை மட்டும் கீரல் விழுமாறு உடைத்து கொள்ளவும்.
அல்லது விதையின் அடிப்பகுதி அல்லது பக்கவாட்டில் உப்பு காகிதம் அல்லது சொர சொரபான தரையில் விதையின் ஓட்டிற்க்கு அடுத்துள்ள பருப்பின் வெண்மை நிறம் தெரியும் வரை உரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு தயார் செய்த விதைகளை ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அவற்றில் செடி நன்கு வளர்ந்து வரும் வரை ஒவ்வொரு நாலும் கிளாசில் தண்ணீர் ஊற்றி மாற்றி வரவும். செடி ஓரளவு நன்கு வளர்ந்த பிறகு.
பிறகு ஒரு சிறிய தொட்டியில் பாதி அளவு களிமண்ணை நிரப்பவும், பின் முளைத்து வாய்ந்த தாமரை விதையை அந்த தொட்டியில் வைத்து விதை மற்றும் ஓரளவு தண்டு முழுகும் வரை மீண்டும் களிமண்ணை நிரப்பவும்.
பிறகு இந்த தொட்டிக்கு தண்ணீர் ஊற்றவும், பின் இன்னொரு பெரிய தொட்டி அல்லது பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் உள்ளே அந்த சிறிய தொட்டியை வைத்தாய் தாமரை செடி முழுகும் வரை தண்ணீர் உற்ற வேண்டும். அவ்வாறு தண்ணீர் ஊற்றும் போது தண்ணீரை மெதுவாக ஊற்றி தொட்டியை நிரப்பவும். தண்ணீரை வேகமாக ஊற்றி நிரப்பினால் தண்ணீர் கலங்கிவிடும் ஆக மெதுவாக ஊற்றவும். உதாரணத்திற்கு மேல் உள்ள படத்தை பார்க்கவும். இவற்றை நன்கு இலைகள் வளர்ந்து பூக்கள் பூக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும்.
தாமரை செடியில் ஓரளவு இலைகள் வளர்ந்த பிறகு அவற்றில் சிறிய சிறிய மீன்களை வாங்கி விடவும். இவ்வாறு செய்வதினால் கொசுக்கள் தண்ணீரில் முட்டை இட்டார் அதனை மீன்கள் சாப்பிட்டுவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரோஜாப்பூ நிறைய பூக்க இதுல ஒரு கைப்பிடி போடுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |