மாங்காய்
பொதுவாக அனைவருக்கும் பழமாக இருந்தாலும் சரி இல்லை காயாக இருந்தாலும் சரி அதில் பிடித்த ஒன்று என்னவென்றால் மாங்காய் மற்றும் மாம்பழம் தான். இந்த மாமரம் நிறைய பேர் அவர்களுடைய வீட்டிலேயே வளர்த்து வருகிறார்கள். இத்தகைய மாம்பழத்தை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட நமது வீட்டிலேயே காய்க்கும் பழங்கள் தான் நமது உடலுக்கு நல்லது. ஏனென்றால் கடைகளில் விற்கும் பழத்தில் ரசாயனம் கலக்கப்படுகிறது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் மரத்தில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு நிறைய மாங்காய் காய்ப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் மாமரத்தில் நிறைய மாங்காய் கொத்து கொத்தாக காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த பதிவானது ஒவ்வொரு வீட்டிலும் மாமரம் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும்.
How to Grow Mango Tree Faster:
மண்:
மாமரம் வைப்பதற்கு முன்பு நாம் அந்த மண் தரமான மண்ணாகவும் மற்றும் சத்துள்ள மண்ணாகவும் இருக்கிறதா என்று கவனமாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீர்பாய்ச்சும் முறை:
நீர் பாய்ச்சுவது பொறுத்தவரை மாமரத்திற்கு அதிகமாக தேவைப்படாது இருந்தாலும் மாமரம் வறட்சியாக இல்லாமல் ஈரப்பதம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
மாமரம் வறட்சி அடைந்து விட்டது என்றால் ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எப்படி என்றால் காலை மற்றும் மாலை என இரண்டு முறையாக பிரித்து நீர் பாய்ச்ச வேண்டும்.
மாமரதத்திற்கு உரம்:
பஞ்சகாவியம் 300 மில்லி மற்றும் இயம் கரைசல் 300 மில்லி இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு கலந்து வைத்துள்ள கரைசல்களை மாமரத்தில் உள்ள இலைகளின் மீது தெளித்து விடுங்கள்.
இது மாதிரி செய்யும் போது அந்த கரைசல்கள் இலைகளின் மீது ஊடுருவி சத்துக்களை வெளியேற்றி அதிகமாக பூக்கள் பூக்க வைக்கும். நீங்கள் தயார் செய்த கரைசலை மாலை நேரங்களில் தான் தெளிக்க வேண்டும்.
நீங்கள் கரைசலை தெளித்தவுடன் பூக்கள் பூத்தாலும் மீண்டும் 8 நாட்களுக்கு ஒரு முறை கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும்.
இரண்டாவது முறை நாம் தெளிக்கும் போது பூத்த பூக்கள் உதிராமல் இருக்கவும் மற்றும் மா பிஞ்சுகள் உதிராமல் இருக்கவும் நன்மை அளிக்கும்.
அடுத்து நீங்கள் இதை செய்து முடித்த பிறகு மாமரத்தை சுற்றி 2 அல்லது 3 அடியில் குழி தோண்டி கொண்டு அந்த குழியில் பஞ்சகாவியம், இயம் கரைசல், மக்கும் குப்பை மற்றும் தேமோ கரைசல் இவை அனைத்தையும் போட்டு குழியை மூடி விடுங்கள். இந்த உரங்கள் அனைத்தும் மரத்தின் வேரிலுருந்து ஊடுருவி பூக்கள் மற்றும் காய்கள் கடிப்பதற்கு உதவியாக இருக்கும்.
இதையும் படியுங்கள்⇒ எலுமிச்சை மரத்தில் கொத்து கொத்தாக காய் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |