Vallarai Keerai Valarpathu Eppadi
வல்லாரை கீரை ஒரு மருத்துவ கீரை வகையாகும். இது நீருள்ள பகுதிகளில் தானாக படர்ந்து வளரும் தன்மை கொண்டது. இது ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்களில் அதிகமாக வளரக்கூடியது. இக்கீரையில் அதிக அளவில் மருத்துவ பயன்கள் உள்ளது. வல்லாரை கீரையை உணவில் எடுத்து கொள்வதன் மூலம் நினைவு திறன் அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய வல்லாரை கீரையை வீட்டின் மாடித்தோட்டத்தில் வளர்ப்பது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
மாடித்தோட்டத்தில் வல்லாரை கீரை வளர்ப்பது எப்படி.?
வல்லாரை வளர்ப்பதற்கு முன் தெரிந்து கொள்ளவேண்டியவை:
வல்லாரை கீரை படர்ந்து வளரக் கூடிய செடி என்பதால் உயரம் குறைவாகவும் நல்ல அகலமாகவும் உள்ள மண் தொட்டிகளிலோ அல்லது குரோ பேக்குகளிலோ வளர்ப்பது நல்லது.
வல்லாரை செடிக்கு விதைகள் இல்லை. இது நாற்றின் மூலம் பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது. எனவே வல்லாரை செடியின் நாற்றினை வாங்கி வந்து மாடித்தோட்டத்தில் விதைக்கலாம்.
வல்லாரை கீரை குளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் நன்றாக வளரக்கூடிய தாவரமாகும். இதனை வெயில் காலத்திலும் வளர்க்கலாம். வெயில் காலங்களில் மட்டும் காலை மாலை என இரு வேலைகளிலும் தண்ணீர் ஊற்றுதல் வேண்டும்.
மாடித்தோட்டத்தில் பிரண்டை வளர்ப்பது எப்படி..
மண்கலவை தயாரித்தல்:
வல்லாரை கீரை களிமண்ணில் நன்றாக வளரக்கூடியது. அதனால் உங்கள் பகுதியில் எந்த வகை மண் கிடைக்கிறதோ அதனை எடுத்து கொள்ளுங்கள்.
மண் 2 பங்கு போடுகிறீர்கள் என்றால் மற்ற உரங்களை 1 பங்கு அளவில் எடுத்து கொள்ளுங்கள்.
மண், தேங்காய் நார், மண்புழு உரம், மாட்டு எருது, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் உயிர் உரங்களான சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை 1 ஸ்பூன் அளவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது வல்லாரை கீரைக்கு மண்கலவை தயார்.!
உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
வல்லாரை கீரை வளர்ப்பு:
வல்லாரை கீரை வளர்ப்பதற்கு 18 இன்ச் அகலமும் 9 இன்ச் உயரமும் உள்ள குரோ பேக் சரியாக இருக்கும். இந்த குரோ பேக்கில் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை நிரப்பி கொள்ளுங்கள்.
பிறகு, வாங்கி வந்த வல்லாரை நாற்றை மண்கலவை நிரப்பியுள்ள குரோ பேக்கில் ஊன்றி சிறிதளவு தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். வல்லாரை செடி நன்கு துளிர் விட்டு வளரும் வரை காலை மாலை என இரு வேலைகளிலும் மிதமான அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
வல்லாரை கீரை 20 அல்லது 30 நாட்களுக்குள் நன்றாக வளர்ந்து விடும். இந்நிலையில் வல்லாரையை நீங்கள் அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு முறை அறுவடை செய்த பிறகும் வல்லாரை செடிக்கு மண்புழு உரம் கொடுக்க வேண்டும். மேலும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளையும் இதற்கு உரமாக அளிக்கலாம்.
வல்லாரை செடியானது ஒரு நாற்றிலிருந்து மற்றொரு நாற்று விட்டு வளரக்கூடியது. எனவே, ஒரு செடிக்கு அருகிலும் மற்றொரு குரோ பேக்கை வைப்பதன் மூலம் அதில் படர்ந்து நன்றாக தழைத்து வளரும்.
உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா..அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |