வீட்டு தோட்டத்தில் மண் வளத்தை அதிகரிக்கும் வழிகள்

Advertisement

மண் வளத்தை எப்படியெல்லாம்  அதிகரிக்கலாம்  சில வழிகள் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் வீட்டு தோட்டத்தில் மண் வளத்தை அதிகரிக்கும் வழிகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். நம் வீட்டுத் தோட்டம் அமைப்பதில் நாம் பயன்படுத்தும்  மண்ணை  குறித்தும், மண்ணின் வளம் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு செடியின் உயிர்  மண்ணின் வளத்தில் இருந்தே தொடங்குகிறது. செடியின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் காய்ப்பு ஆகியவை மண்ணின் வளத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. மண் வளம்தான் தாவரத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், தண்ணீர் மற்றும் காற்றை வழங்கும். இயற்கையான காலநிலை, மண் இருக்கும் இடம், நிகழும் சூழல், காற்றில் உள்ள ஈரப்பதம், ஒளியின் அளவு, மண் மாசுபாட்டின் அளவு ஆகியவற்றை பொறுத்ததே மண்ணின் வளத்தை கணிக்க முடியும். இத்தகைய மண் வளத்தை மேம்படுத்த சில வழிகளை நம் பதிவில் மேலும பார்க்கலாம் வாங்க.

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இவ்வளவு சாகுபடியா

மண் வளத்தை அதிகரிக்கும் சில வழிகள்:

ஒரு நிலத்தில் ஒரே வகையான பயிரை திரும்பப்  திரும்ப சாகுபடி செய்வதால் மண்ணின் சத்துக்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் மண்ணின் வளம் குறைந்து காணப்படுகிறது.

கரையான் மற்றும் மண் புழு இவை மண்ணை அதிகம் உற்பத்தி செய்ய கூடியவையாகும்.

கரி, சுண்ணாம்பு, மரத்தூள், மர சாம்பல் போன்றவற்றை  ஏதேனும் ஒன்றையோ அல்லது மொத்த கலவையையும் மண்ணுடன் கலந்து பயன்படுத்தலாம். இது மண்ணுக்கு தேவையான தழைச்சத்தை அளிக்கும். மேலும் மண் இறுக்கம் அடைவதைக்  குறைக்கும்.

புழு, பூண்டு, சாமந்தி பூக்கள் கலவையை மண்ணுக்கு மேல் ஒரு அடுக்கு போல படரச் செய்யலாம். இது மண்ணுக்குத் தேவையான நுண் சத்துக்களை அளிப்பதுடன் செடிக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

மண்ணை வளத்தை அதிகரிக்க வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, சங்குப்பூ, மொச்சை, அவரைக்காய், நிலக்கடலை  மற்றும் கொண்டைக் கடலை போன்றவை  மண் வளத்தை மேம்படுத்த பயிரிடலாம். எவ்வித உரம், கலவை இல்லாமல் இயற்கையாகவே மண்ணின்  வளத்தை இது மேம்படுத்தும்

இலையுதிர் மற்றும் வசந்த காலங்களில்  மண்ணை வெயில் பரப்பி உலர்த்தலாம். இது மண்ணை தளர்வாக்குவதுடன், காற்று மற்றும் சூரிய ஒளியின் மூலம் தழைச்சத்தை பெற உதவும். இதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கும்.

மண்ணில் விடும் தொழு உரம், பசுந்தாள் உரம், வீட்டு கழிவுகள் ஆகியவற்றை மட்கச் செய்து உரமாக பயன்படுத்தலாம். இது மண்ணின் வளத்தை பெருக்க செய்கிறது.

வீட்டில்  சமையல் கழிவுகள், மரம் வெட்டுதலுடைய கழிவுகள், காய்ந்த இலைகள், வெட்டிய புல், மக்கிய காகித குப்பை,  பூப்பதற்கு முன் மடிந்த செடிகள் அல்லது கிளைகள், உணவு கழிவுகள், பறவை எச்சங்கள் போன்றவற்றை பயன்படுத்தி உரம் தயாரிக்கலாம். இதன் மூலம் மண்ணின் வளைத்தை அதிகரிக்க  செய்யலாம்.

உரம் தயாரிக்க பயன்படுத்தக்கூடாதவை:

ஸ்ட்ராபெரி வேர்த்தண்டுக் கிழங்குகள், ஒற்றை வேர் கொண்ட முட்டைகோஸ் தண்டுகள், பூக்கத் தொடங்கிய பின் மடிந்த கிளைகள் அல்லது விதைகள் போன்றவற்றை உரம் தயாரித்தலில் பயன்படுத்த கூடாது.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம

 

Advertisement