வீட்டில் எளிய முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை..! How to Make Manpulu Uram in Tamil..!
How to Make Manpulu Uram in Tamil – இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவு பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உட்க்கொண்டுஎச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றிவதையே மண்புழு உரம் என்பதும். இந்த உலகில் மண்புழுக்களின் 3000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. அதில் 6 வகை மண்புழுக்கள் உரம் தயாரிக்க மிகவும் உகந்தது. இந்த மண்புழு உரங்கள் செடி வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்கிறது. இத்தகைய மண்புழுவை வீட்டில் மிக எளிய முறையை தயார் செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
மண்புழு உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- பெரிய பக்கெட் – 1
- காகித அட்டை
- பழைய நியூஸ் பேப்பர்
- காய்கறி கழிவுகள்
- காய்ந்த இலைகள்
- மண்ணில் மக்கக்கூடிய பொருட்கள்
- பச்சை இலைகள்
- நன்கு புளித்த தயிர் – ஒரு டம்ளர்
- தண்ணீர் – மூன்று டம்ளர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கத்திரிக்காய் செடியில் கொத்து கொத்தாக காய் காய்க்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
மண்புழு உரம் தயாரிக்கும் முறை – How to Make Manpulu Uram in Tamil:
- பெரிய பக்கெட் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் அடிப்பகுதி மற்றும் வாளியின் ஓரங்களில் சிறு சிறு துளைகளை போட்டுக்கொள்ளவும்.
- காகித அட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாளியில் போடவும்.
- பிறகு அதன் மேல் காய்ந்த இலைகளை போடவேண்டும்.
- பின்பு காய்கறி கழிவுகளை போடவேண்டும்.
- காய்கறி கழிவுகளை போட்ட பிறகு மீண்டும் காய்ந்த இலைகளை போட வேண்டும்.
- பிறகு நியூஸ் பேப்பரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.
- நியூஸ் பேப்பர் போட பிறகு பச்சை இலைகளை ஒரு லேயராக போட வேண்டும்.
- பிறகு மீண்டும் காய்ந்த இலைகளை சேர்க்கவும்.
- பிறகு மீண்டும் காய்கறி கழிவுகளை சேர்க்கவும்.
- பின்பு களிமண்ணை ஒரு லேயராக போடவும்.
- களிமண்ணை சேர்த்த பிறகு மீண்டும் காய்கறி கழிவை சேர்க்க வேண்டும்.
- பின் மீண்டும் காய்ந்த இலைகளை சேர்க்கவும்.
- காய்ந்த இலைகளை சேர்த்த பிறகு மீண்டும் பழைய நியூஸ் பேப்பரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.
- நியூஸ் பேப்பரை சேர்த்த பிறகு களிமண் அல்லது கோகோ பீட் ஏதாவது ஒன்றை ஒரு லேயராக போட வேண்டும்.
- பிறகு ஒரு டம்ளர் புளித்த தயிருடன், மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அவற்றில் தெளித்து விட வேண்டும். பிறகு நன்றாக மூடி வைக்கவும்.
- பிறகு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அவற்றை திறந்து பார்த்து ஈரப்பதமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். ஒரு வேலை ஈரப்பதமாக இல்லை என்றால் லேசாக தண்ணீர் தெளித்துவிடவும்.
- அதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை இவற்றை கிளறிவிட வேண்டும். ஒரு மாதத்திற்குள் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள கலவைகள் மக்கிவிடும் ஆக அதன்பிறகு நீங்கள் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் மண்புழு உரம் தயாராக இரண்டு மாதங்கள் ஆகும். ஆக 15 நாட்களுக்கு ஒருமுறை கலவையை கலந்துவிடுங்கள்.
- 2 மாதங்களுக்கு பிறகு மண்புழு உரம் தயாராகிவிடும். அந்த மண் புழு உரத்தை உங்கள் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் தண்ணீரில் மணி பிளான்ட் வளர்ப்பது எப்படி..?
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |
மண்புழு உரம் தயாரிக்கும் முறை pdf