இயற்கை விவசாயம் நார் பயிர் – சணல் சாகுபடி முறை..!

Advertisement

நார் பயிர் – சணல் சாகுபடி முறை (Jute Cultivation)..!

சணல் பயிர் மேலாண்மை:-

சணலை சாகுபடி செய்ய தகுந்த மாவட்டங்கள் கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களாகும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளில் எங்கெல்லாம் நிச்சயமான நீர் நிலைகள் உள்ளனவோ, அங்கு சணல் சாகுபடி (Jute Cultivation) செய்யலாம்.

இரகங்கள்:-

ஒலிட்டோரியல் சணல் – ஜே.ஆர்.ஓ 524, 878, 7835, கேப்சுலாரிஸ் சணல் – ஜே.ஆர்.சி 212,321,7447 ஆகிய இரகங்கள் சணல் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்கள் ஆகும்.

பருவ காலம்:-

சணல் சாகுபடி (Jute Cultivation) பொறுத்தவரை மாசி – வைகாசி மாதங்கள் சாகுபடி செய்ய சிறந்த காலமாகும்.

மண்:-

மணல் கலந்த வண்டல் மற்றும் களிமண் வகைகள் சணல் சாகுபடி செய்ய ஏற்றது. கேப்சுலாரில் சணல் வகை நீர் தேங்கும் நன்செய் நிலங்களிலும் வளரக்கூடியது. ஆனால் ஒலிட்டோரியல் சணல் வகை நீர் தேங்கும் பகுதிகளில் வளராது.

விதையளவு:-

சணல் சாகுபடி (Jute Cultivation) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு வரிசை விதைப்பு முறையில் ஒலிட்டோரியல் 5 கிலோ, கேப்சுலாரிஸ் 7 கிலோ தேவைப்படும். தெளிப்பு முறையில் ஒலிட்டோரியல் 7 கிலோ, கேப்சுலாரிஸ் 10 கிலோ தேவைப்படும்.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!

நிலம் தயாரித்தல்:-

சணல் சாகுபடி (Jute Cultivation) பொறுத்தவரை நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும்.

கடைசி உழவின் போது ஐந்து டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவு செய்ய வேண்டும். எக்டருக்கு 20 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை அடியுரமாக இடவேண்டும்.

நீர் பாய்ச்சுவதற்கு ஏற்ப பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதைத்தல்:-

சணல் சாகுபடியில் பொறுத்தவரை ஒலிட்டோரியல் இரகங்களுக்கு 25 x 5 செ.மீ இடைவெளியும், கேப்சுலாரிஸ் இரகங்களுக்கு 30 x 5 செ.மீ இடைவெளியும் விட்டு வரிசை விதைப்பு முறை அல்லது தெளிப்பு முறையில் விதைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை:-

விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

உரமேலாண்மை:-

சணல் சாகுபடியில் ஒவ்வொரு முறையும் களை எடுத்த பின்பு அல்லது 20-25 நாட்கள் மற்றும் 35-40 நாட்களில் 10 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும். வறட்சியான காலங்களில் 8 கிலோ யூரியாவை 2 சத கரைசலாக ஒரு லிட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் 40-45 நாளிலும் மற்றும் 70-75 நாளிலும் தெளிக்கலாம்.

மணிச்சத்து, சாம்பல் சத்து 

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

களை நிர்வாகம்:-

விதைத்த 20-25 நாட்களில் ஒரு முறையும், 35-40 நாட்களில் ஒரு முறையும் களை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் புளுகுளோரலின் களைக்கொல்லியை ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ என்ற அளவில் விதைத்த மூன்றாம் நாள் தெளித்து, உடனே நீர்ப்பாய்ச்ச வேண்டும். இதைத் தொடர்ந்து 30-35 நாட்களில் ஒரு களை எடுத்தால் போதுமானது.

பயிர் பாதுகாப்பு:-

சணல் சாகுபடி பொறுத்தவரை இதில் பெரும்பாலும் நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை.

அறுவடை:-

சணல் சாகுபடியில் (Jute Cultivation) சாதாரணமாக 100 – 110 நாட்களில் அறுவடைக்கு வரும். நமது தேவைக்கேற்ப 135 நாட்கள் கழித்தும் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட சணல் செடிகள் வயலில் 3-4 நாட்கள் பரப்பப்பட்டு இலைகளை உதிர்த்தி வைக்க வேண்டும். அதன் பிறகு மெல்லிய மற்றும் உருண்ட தண்டுகள் தனியாக பிரிக்கப்பட்டு கத்தைகளாக கட்ட வேண்டும்.

மகசூல்:-

ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் செடிகள் 45-50 டன்கள் வரை எடை உள்ளது. இதிலிருந்து எக்டருக்கு சுமார் 20-25 டன் சணல் கிடைக்கும்.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.
Advertisement