கறிவேப்பிலை செடி வேகமாக வளரவும், இலைகள் பெரிதாகவும் இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Karuveppilai Chedi Valarpu

அனைவருடைய வீட்டு தோட்டத்திலும் என்ன செடி இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக கறிவேப்பிலை செடியானது இருக்கும். ஏனென்றால் அசைவம் முதல் சைவம் வரை என எந்த சாப்பாட்டினை சமைத்தாலும் அதில் கறிவேப்பிலையை தான் பயன்படுத்திடுவார்கள். இவ்வாறு கறிவேப்பிலையின் தேவை அதிகமாக இருப்பதனால் 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டே இருக்க முடிய காரணத்தினால் வீட்டிலேயே வளர்ப்பார்கள். ஆனால் நீங்கள் என்ன தான் செய்தாலும் அதில் சரியான வளர்ச்சியை மட்டும் நீங்கள் பார்க்கவே முடியாது. அதனால் இன்று கறிவேப்பிலை செடி செழிப்பாக வளரவும், இலை பெரியதாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கறிவேப்பிலை செடி வளர்ப்பு:

கறிவேப்பிலையை செடியை பொறுத்தவரை போதுமான அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். அதேபோல் கறிவேப்பிலை செடியில் நீங்கள் இலைகளை பறிக்கும் போது ஒன்று ஒன்றாக பறிக்காமல் கிளைகளாக பறிப்பது என்பது அவசியம்.

அதேபோல் மாதம் 1 முறை மண்புழு உரம், மாட்டுச்சாணம் மற்றும் ஆட்டுச்சாணம் உரம் என இவற்றினை உரமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் கறிவேப்பிலை செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து இலைகள் பெரியதாக வைக்கும்.

 கறிவேப்பிலை செடி வளர்ப்பு

  1. அரிசி கழுவிய தண்ணீர்- 1/2 லிட்டர்
  2. எலுமிச்சை பழம்- 1
  3. தண்ணீர்- 1/2 லிட்டர்

முதலில் ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 1/2 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் 1 எலுமிச்சை பழத்தினை அப்படியே சாறு பிழிந்து அதில் ஊற்றி கொள்ளுங்கள். பின்பு இதனை 2 நாட்கள் வரை அதிகமாக வெயில் இல்லாத இடத்தில் மூடி வைத்து விடுங்கள்.

2 நாட்கள் கழித்து இந்த தண்ணீருடன் 1/2 லிட்டர் சாதாரண தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இந்த தண்ணீரை கறிவேப்பிலை செடிக்கு அடியில் ஊற்றுங்கள். இத்தகைய கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்றினால் போதும் செடி செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

புளித்த மாவு மட்டும் போதும் மல்லிகை பூ செடியில் பூக்கள் தாறுமாறாக பூக்க 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement